ஆய்வறிக்கை
மாணவர்களின் ஒழுக்கநெறியினால் கற்றல் வெளிப்பாடுகளில் ஏற்படும் மாற்றம்
நாள் : டிசம்பர் 2023
மாணவர்களின் ஒழுக்கநெறியினால் கற்றல் வெளிப்பாடுகளில் ஏற்படும் மாற்றம் பல்லாண்டு காலமாக, கல்வி மற்றும் மதிப்பீட்டு திட்டத்தின் வெற்றி என்பதன் அர்த்தம் மாணவர்கள் கற்றல் வெளிப்பாடுகளில் அடையும் வெற்றியையே குறிக்கும். ஒரு சிலர் ‘கற்றல் வெளிப்பாடுகளில் வெற்றி’ என்பதை தொடர்ந்து நடத்தப்படும் தேர்வுகளின் மதிப்பீடுகளின் பொதுவான அளவீடாக கருத்தில் கொள்கின்றனர், வேறு சிலரோ இதை இன்னும் ஆழமான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். ‘கற்றல் வெளிப்பாடுகளில் வெற்றி’ என்பதை அடையாளம் காண பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. ‘கற்றல் வெளிப்பாடுகளில் வெற்றி’ என்பது ஒரு மாணவன் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் மட்டுமல்ல, அவர் கற்றல் அறித்திறனில் வளர்த்துக்கொள்ளும் முழுமையான வளர்ச்சியும் இதில் அடங்கும். இங்கு முழுமையான வளர்ச்சி என்பது ஓரு மாணவர் எவ்வாறு கல்வி அல்லது தேர்வு தொடர்பான….