கல்வி துறையில் செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்படும் அபாரமான கற்றல் வெளிப்பாடுகள்

கல்வி துறையில் செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்படும் அபாரமான கற்றல் வெளிப்பாடுகள்

இன்றைய உலகம் ஒரு டிஜிட்டல் யுகத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. வியாபாரம், தொலைத்தொடர்பு, ஆரோக்கியம், பயணம் மற்றும் கல்வி போன்ற மனித வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் தொழில்நுட்பத்தின் தலையீடு உள்ளது. உலக அளவில், கல்வித் துறையானது தொழில்நுட்பத்தை முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்களின் தாக்கம் கல்வி துறையில் மிகப்பெரும் அதிசயங்களை நிகழ்த்தி வருகிறது. இதில் மிக முக்கியமான தொழில்நுட்பம், தொலைநோக்குடன் செயல்படும் செயற்கை நுண்ணறிவாகும். செயற்கை நுண்ணறிவிற்கான கோட்பாடுகள் பல தசாப்தங்கள் பழையதாக இருந்தாலும், கமாடிட்டி கம்ப்யூட்டிங் வன்பொருளின் பெருக்கம் இதை மிக சுலபமாக பயன்படுத்தக்கூடிய ஒன்றாக மாற்றியுள்ளது.

சமீப காலத்தில் இந்தியாவில், பள்ளி-நிலை கல்வி எதிர்பாராத அளவு அடைந்திருக்கும் முன்னேற்றமானது, 90-க்கும் மேற்பட்ட மொத்த மாணவர் சேர்க்கை விகிதங்களையும்,முந்தைய நூற்றாண்டுகளை விட கல்வி துறைக்கு சிறந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மாணவர் தக்கவைப்பின் குறைந்த விகிதங்கள் மற்றும் கற்றல் வெளிப்பாடுகளில் தேவையான அளப்பெரிய மாற்றங்கள், இன்னும் உலகத் தரத்திற்கு இணையாக இந்தியாவைக் கொண்டுவருவதற்கு சவாலாகவே இருக்கிறது. இந்திய கல்வி துறையில் ஏற்படும் மிகப்பெரும் மாற்றங்கள் பொதுவாக தனியார் நிறுவனங்களாலேயே தொடங்கப்படுகிறது. மேலும், தற்போது தரவுகளால் இயங்கும் புதிய கண்டுபிடிப்புகள் இந்தியாவின் முக்கிய பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

கருத்துக்களை புரிந்துகொள்ளுதல், மாணவர்களை புரிந்துகொள்ளுதல், மேம்பட்ட தரவுகளின் செயலாக்கம் மற்றும் ஆசிரியர்களின் பணி பெருக்கம் ஆகியவை கற்றல் வெளிப்பாடுகளை மேம்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இது மாணவர், ஆசிரியர் மற்றும் நிறுவனம் என்ற மூன்று தரப்பினரால், பாரம்பரியமாக கல்விக்கென இருந்து வரும் கருத்தியலை கதிகலங்க வைத்துள்ளது என்றால் மிகையாகாது. 

கல்வி துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இயங்கும் தொழில்நுட்பம், தனிப்பயனாக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் மாணவர்களுக்கு கற்றல் பரிந்துரைகளை வழங்குதல், கற்பவர்களின் கல்வி திறன் மற்றும் ஒழுக்கநெறி பலவீனங்களை கண்டறிதல், நேர விரயம் செய்யும் பணிகளை தானியக்கமாக்குதல், பலமுறை செய்யப்படும் வேலை போன்றவற்றை கண்டறிந்து அதுவே செய்துவிடுவதால் இனி ஆசிரியர்கள் கல்வி கற்றுக்கொடுப்பதில் மட்டும் கவனத்தை செலுத்தினால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது கருத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தானியக்கமாக்குதல் ஆகியவற்றை தூண்களாக கொண்டு கட்டப்பட்ட செயற்கை நுண்ணறிவால் இயங்கும் எட்டெக் தளமாகும். இது, பயனாளர்களின் கருத்து பரிமாற்ற தரவுகளையும் நுண்ணறிவால் இயங்கும் கற்றல் தலையீட்டு அம்சத்தையும் கொண்டு மாணவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது.

முழு கட்டுரையையும் இங்கே பதிவிறக்கவும்

பரிந்துரைகள்:

  1. Corbett, A. T. and Anderson, J. R. (1994), “Knowledge tracing: Modeling the acquisition of procedural knowledge,” User modeling and user-adapted interaction, vol. 4, no. 4, pp. 253–278, 1994
  2. Cukier, Kenneth (2019). “Ready for Robots? How to Think about the Future of AI”. Foreign Affairs. 98 (4): 192, August 2019.
  3. Faldu, K., Avasthi, A. and Thomas, A. (2018) “Adaptive learning machine for score improvement and parts thereof,” US20180090023A1, Mar 29, 2018.
  4. Lin, Y., Liu, Z., Sun, M., Liu, Y., & Zhu, X. (2015). Learning entity and relation embeddings for knowledge graph completion. In 29th AAAI Conference on Artificial Intelligence, Feb 2015.