அறிவார்ந்த டெஸ்ட் உருவாக்கம்

அறிவார்ந்த டெஸ்ட் உருவாக்கம்

இப்போதும் உலகமெங்கும் தேர்வு அடிப்படையிலான மதிப்பாய்வே மாணவர்களை மதிப்பிடுவதற்கான மிக பிரபலமான முறையாக உள்ளது. தேர்வின் நோக்கம் அதிகளவில் இருக்கும் மாணவர்களை எளிமையாக மதிப்பீடு செய்வதே. இது அவர்களின் கல்வித் திறனை மதிப்பிடுவது மட்டுமின்றி அவர்களை தனித்திறன் அடிப்படையில் வகைப்படுத்தவும் உதவுகிறது. எனவே, பாடத்திட்டம், உள்ளடக்கம், மற்றும் கடின நிலை போன்ற பல பாகுபாடு காரணிகளை கொண்டு வினாத்தாளில் கேள்விகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தேர்வின் கடின நிலையை ஒத்த, உயர்தர டெஸ்ட்களை தானியக்கமாக உருவாக்கும் வணிகரீதியான செயலிகள் இல்லாதது டெஸ்ட் உருவாக்கத்தை கடினமானதாக மாற்றுகிறது

கடினத்தன்மை மற்றும் NP- ஹார்ட் காம்பினேட்டரிக்ஸ் பிரச்சனையின் பிற பண்புகளை கொண்ட நிகழ் உலக தேர்வின் அதே பேட்டர்ன், தானியக்கமாக உருவாக்கப்படும் வினாத்தாள்களுக்கும் பொருந்துகிறது. இது அவசியம் கடினமான தனித்துவ தேர்வுமுறை பிரச்சனையாக இருத்தல் வேண்டும். அதில் கடினத்தன்மையின் நிலை மற்றும் கேள்வி நிலை பொருத்து டெஸ்ட் கேள்விகளுக்கு பதிலளிக்க தேவைப்படும் நேரம், தேர்வு நிலை பொறுத்த பாடத்திட்டத்தின் உள்ளடக்கம், தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கான கருத்துக்களின் பகிர்தல், முந்தைய தேர்வுகளில் கேட்கப்படாத கருத்துக்களை மதிப்பாய்வு செய்தல், கேள்விகளுக்கு பதிலளிக்க தேவைப்படும் திறன்களை பகிர்தல், சென்ற வருட தேர்வு கேள்விகளின் மாதிரி போன்ற பல்வேறு தடைகளால் நாம் பெரும்பாலும் ஆயிரக்கணக்கான கேள்விகளில் இருந்து, 100 கேள்விகளுக்கான தேடல் வெளியில், 100க்கும் குறைவான டெஸ்ட் கேள்விகளையே தேர்தெடுப்போம்.

Embibe, சொந்தமாக இயந்திர கற்றல் அடிப்படையிலான ஸ்டாக்கை உருவாக்கியுள்ளது, இதை தானியக்கமாக உருவாக்குவதற்கு ஜெனிடிக் வழிமுறைகள் மற்றும் உருவகப்படுத்தப்பட்ட அனீலிங் போன்றவைகள் பயன்படுத்தப்படுகிறது. தானியக்க முறையில் உருவாக்கப்பட்ட வினாத்தாளின் தரத்தினை மதிப்பிட ஒரு புதிய முறையினையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். இத்தகைய அலகாரித விவரங்கள் இந்த கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டவை.

நிகழ்வாய்வு: Embibe தானியக்க டெஸ்ட் உருவாக்க அமைப்பால் வினாத்தாள்களின் ஆய்வின் முடிவுகளை படம் 1 காட்டுகிறது. நாங்கள் 20 வினாத்தாள்களை உருவாக்க அமைப்பைப் பயன்படுத்தினோம். மேலும், எங்கள் தளத்தில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ~8000 மாணவர்களிடம் இந்த டெஸ்ட்களை நடத்தினோம்.

படம் 1 மாணவர்கள் பெற்ற டெஸ்ட் மதிப்பெண்களை கட்டங்களாக காட்டுகிறது. ஒவ்வொரு டெஸ்ட் தாளிற்கும் ஒரு கட்டம் என பங்கிட்டு காட்டுகிறது. நான்கு டெஸ்ட்கள், டெஸ்ட்-15, டெஸ்ட்-16, டெஸ்ட்-17 மற்றும் டெஸ்ட்-18  தவிர அனைத்து தேர்வுகளிலும் மதிப்பெண் பங்கீடும் ஒரே மாதிரியாக இருப்பதை நாம் காணலாம். ஏனென்றால், இந்த வினாத்தாள்களில் உள்ள கேள்விகளின் தொகுப்பை எங்கள் ஆசிரியர்கள் உருவாக்கினார்கள், இது மதிப்பெண்கள் பகிர்வில் இருக்கும் ஒழுங்கின்மையை காட்டுகிறது. இது Embibe தளத்தின் தானியக்க டெஸ்ட் உருவாக்க அமைப்பு, சராசரி மாணவர் செயல்திறனை அளவிடும் போது, தொடர்ந்து ஒரே மாதிரியான டெஸ்ட் முடிவுகளையே உருவாக்குகிறது என்பதை பறைசாற்றுகிறது.