கேள்விகளுக்கு தானாக பதிலளிக்கும் தீர்வி தொழில்நுட்பம்
நூற்றுக்கணக்கான தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களிலிருந்து, ஆயிரக்கணக்கான கருத்துகள் சார்ந்த கேள்விகளை பயிற்சிக்க அனுமதிக்கும் எட்டெக் தளம் Embibe. இது மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு எப்படி பதிலளிக்கலாம் என்ற புரிதலுக்காக, அந்த கேள்விக்கான விளக்கம் மற்றும் படிப்படியான தீர்வு வழிகாட்டிகளுடன் கேள்விகளை மேம்படுத்த முதலீடு செய்துள்ளது. இங்கு துறை சார்ந்த வல்லுநர்கள் கேள்விகளை தீர்த்து தக்க பதிலளிக்கின்றனர்.
Embibe-யின் கேள்வித் தரவுகள் அதிகரிக்கும் போது, வல்லுநர்கள் உருவாக்கிய தீர்வுகளைப் பயன்படுத்துவது என்பது கற்பனை செய்யமுடியாத அளவிற்கு விலையுயர்ந்ததாக இருக்கும்.
அதை ஒப்பிடுகையில், தீர்வி தொழில்நுட்பம் துறைக்கு புதிதே. இது இடைநிலை நிலை கணிதம் போன்ற குறிப்பிட்ட களம் சார்ந்த கேள்விகளை தீர்க்கும் அலகாரிதமை உருவாக்கி வெற்றி வாகை சூடியுள்ளது.
ஏராளமான கேள்விகளுக்கு தானாகவே பதில் வழங்குதல், படிப்படியான தீர்வுகளை உருவாக்குதல், போன்றவைகளை மேம்படுத்த Embibe தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது.
கணக்கு அறிக்கை
கொடுக்கப்பட்டுள்ள கணித ரீதியான உரை கேள்வியை தீர்க்கும் குறியீடுகளைப் பயன்படுத்தி தீர்த்தல், படிப்படியான தீர்வை வழங்குதல்.
மாணவர் கேட்கும் கேள்வி, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது குறிப்பிட்ட வடிவத்தில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாங்கள் அதைத் தீர்க்க முயற்சித்து, அதற்கான படிப்படியான தீர்வுகளையும் வழங்குகிறோம்.
அணுகுமுறை
இங்கே, முழு செயல்முறையும் எப்படி இருக்கும் என்பது காட்டப்பட்டுள்ளது:
உதாரணத்திற்கு,
இங்கே, CBSE 6 ஆம் வகுப்பில் இருந்து ஒரு கேள்வி:
“எண்களில் எழுதுங்கள் – இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்து தொல்லாயிரத்து முப்பத்தாறு.”
எனவே, முதல் நிலையில், இந்த கேள்வியைத் தீர்க்கக்கூடிய குறியீட்டை(solver code) கணிக்க முயற்சிக்கிறோம், இது “convert_text_to_number”.
அடுத்த நிலையில், கணித்த தீர்வை மதிப்பீடு செய்வதற்கான தருமதிப்பை நாம் பெறுகிறோம். எனவே, இந்த நிகழ்வில் தீர்விற்கான உள்ளீட்டு தருமதிப்பு “இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்து தொல்லாயிரத்து முப்பத்தாறு” ஆக இருக்கும்.
எனவே, நாம் முழு தீர்வையும் பெறுகிறோம்:
convert_text_to_number(இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்து தொல்லாயிரத்து முப்பத்தாறு).
இந்த பதில் மற்றும் படிப்படியான தீர்வைப் பெற தருமதிப்புடன் தீர்வியை மதிப்பீடு செய்கிறோம். அதாவது:
மற்றொரு எடுத்துக்காட்டுடன் விரிவாகப் பார்ப்போம்:
“திருமதி சோனி 7 1/2 லிட்டர் பால் வாங்கினார். இந்த பாலில், 5 3/4 லிட்டர் பால் குடிக்கப்பட்டது. அப்படியெனில் அவளிடம் எவ்வளவு பால் மீதம் இருக்கும்? ”
பின்வருவது போன்ற தீர்வு படிகளை நாம் பெறுவோம்.
தீர்வு
தீர்வை இரண்டு படிகளாகப் பிரிக்கலாம்.
- தீர்வி குறியீடு கணிப்பு
- தருமதிப்பை பிரித்தெடுத்தல்
தீர்வி குறியீட்டை கணிக்கும் போது, கொடுக்கப்பட்ட கணித கணக்குகளை தீர்க்கக்கூடிய தீர்விக் குறியீடுகளைப் பயன்படுத்தி கணிக்க முயற்சிக்கிறோம். உதாரணமாக, மேலே உள்ள எடுத்துக்காட்டில், “subtract_fractions_mixed_type” என்பது சரியான தீர்வாகும், இதைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட கணக்குகளை தீர்க்க முடியும். நாம் கணக்குகளை தீர்க்கும் தீர்வுக் குறியீட்டை உருவாக்கும் T5 போன்ற ஆழந்த கற்றல் உருவாக்கும் seq2seq மாதிரிகளைப் பயன்படுத்தலாம்.
நாம் இரண்டாவது படிக்குச் செல்வதற்கு முன், ஒவ்வொரு தீர்வி குறியீட்டிற்கும் தருமதிப்புடன் 1 மாதிரி தீர்வை வைத்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, “subtract_fractions_mixed_type”க்கான மாதிரி தீர்வியானது “subtract_fractions_mixed_type(1 2/3, 4 5/6)” போன்றதாக இருக்கலாம். இது எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும், விரைவில் ஆராய்வோம்.
கொடுக்கப்பட்ட கணக்குகளை தீர்க்கக்கூடிய கணிக்கப்பட்ட தீர்வி குறியீட்டைப் பெற்றவுடன், கேள்வியிலிருந்து தருமதிப்பை பெற வேண்டும். அதற்கும், T5 போன்ற ஜெனரேட்டிவ் seq2seq மாதிரிகளைப் பயன்படுத்தலாம். கற்றல் அறித்திறன் வரைபடங்களில் இருந்து எடுக்கப்பட்ட சொற்பொருள் தொடர்புகளை பயன்படுத்த, அறித்திறன் உட்புகுத்தல் கட்டமைப்புடன் இத்தகைய மொழி மாதிரிகள் மேலும் விரிவாக்கப்படுகின்றன. கணிக்கப்பட்ட தீர்வுக்கான கணக்கு அறிக்கை மற்றும் மாதிரி தீர்வை நாம் கொடுக்கலாம். மேலும் T5[1] மாதிரியிலிருந்து வரும் கேள்விகளில் இருந்து உண்மையான தருமதிப்புடன் தீர்வி குறியீட்டைப் பெறுவோம். எனவே முடிவில், மேலே உள்ள எடுத்துக்காட்டில் இருந்து “subtract_fractions_mixed_type (7 1/2, 5 3/4)” என்ற தருமதிப்பின் தீர்வி குறியீட்டைப் பெறுவோம்.
கேள்வியிலிருந்து வாதங்களைப் பெறுவதற்கு ஒப்பீட்டளவில் எளிமையான மற்ற முறைகளையும் பயன்படுத்தலாம். எங்களிடம் உள்ளதை போன்று ஒவ்வொரு தீர்விக்கான தருமதிப்பின் தரவு வகைகள் மற்றும் மாதிரிகள் நம்மிடம் இருந்தால், கேள்வியிலிருந்து ஒத்த எண்களைப் பெற முயற்சி செய்யலாம்.
இப்படி நாம் தீர்வி குறியீட்டைக் கணித்து, கேள்வியிலிருந்து தீர்க்கும் தருமதிப்பை பெறுவோம். இரண்டும் கிடைத்தவுடன், சரியான பதிலையும், படிப்படியான தீர்வையும் பெற, தீர்வுக் குறியீட்டை மதிப்பீடு செய்ய வேண்டும்.
ரெபரென்சஸ்
[1] Colin Raffel, Noam Shazeer, Adam Roberts, Katherine Lee, Sharan Narang, Michael Matena, Yanqi Zhou, Wei Li, Peter J. Liu. “Exploring the Limits of Transfer Learning with a Unified Text-to-Text Transformer”
[2] Amini, Aida, Saadia Gabriel, Peter Lin, Rik Koncel-Kedziorski, Yejin Choi, and Hannaneh Hajishirzi. “MathQA: Towards interpretable math word problem solving with operation-based formalisms.” arXiv preprint arXiv:1905.13319 (2019).
[3] Faldu, Keyur, Amit Sheth, Prashant Kikani, and Hemang Akabari. “KI-BERT: Infusing Knowledge Context for Better Language and Domain Understanding.” arXiv preprint arXiv:2104.08145 (2021).
[4] Gaur, Manas, Keyur Faldu, and Amit Sheth. “Semantics of the Black-Box: Can knowledge graphs help make deep learning systems more interpretable and explainable?.” IEEE Internet Computing 25, no. 1 (2021): 51-59.