சிறுபிள்ளையிலேயே சிறகடித்து பறக்க கற்றுக்கொடுங்கள்

சிறுபிள்ளையிலேயே சிறகடித்து பறக்க கற்றுக்கொடுங்கள்

இன்றைய காலகட்டத்தில், உலகின் பல பகுதிகளில் இருக்கும் கல்வி முறைகளின் நிலை குறித்த மேலோட்டமான பார்வையை உணர்த்தும், பிரபலமான மீம் ஒன்று இருக்கிறது. மரத்தில் ஏறும் திறமையை வைத்து ஒரு மீனின் திறனை தீர்மானிப்பது என்பது பறப்பான் பயிர் இழந்தான் என்ற கதையாகும்.

படம் 1: “நியாயமான” கல்வி முறையின் “அநியாயம்”

இருப்பினும், பல பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அமைப்புகள் இதைத்தான் மாணவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள். வழக்கமான கல்வி முறையின் பொதுவான புகார், ஒரு மாணவரினுள் பொதிந்து கிடக்கும் திறன்களை அடையாளம் கண்டு, அதை மேலும் மெருகூட்ட அவர்களுக்கு தேவையான சரியான துறைகளை நோக்கி வழிநடத்தவது என்பது கடினமான ஒன்று.

எங்கள் Embibe தளம், தனித்துவம் வாய்ந்தது. கருத்துக்கள் மற்றும் பயனர் மாதிரியை அவ்வப்போது மேம்படுத்துகிறோம். அதுமட்டுமின்றி, மாணவர்கள் எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் போது சேகரிக்கப்பட்ட விரிவான கருத்து பரிமாற்ற தரவை அகழ்ந்து எடுத்து, பல்வேறு கருத்துக்கள் மூலம் மாணவர்களின் திறன் நிலைகளை எங்களால் அளவிட முடியும். இதற்கு தீர்வாக, Embibe அணுகும் எல்லையில்லாத தரவு அளவுகளை பற்றிய ஒரு பார்வை:

  • 5 ஆண்டுகளுக்கும் மேலாக, 75 மில்லியனுக்கும் மேற்பட்ட மொத்த அமர்வுகள் மற்றும் 5.5 மில்லியன் மணிநேரங்கள் செலவிடப்பட்டிருக்கிறது.
  • நுண்ணறிவுகளில் பொதிந்து கிடக்கும் 24 பில்லியனுக்கும் மேற்பட்ட மெட்டாதரவுகள், 90 மில்லியனுக்கும் மேற்பட்ட முயற்சிகள்
  • Embibe கற்றல் அறித்திறன் வரைபடத்தில் 700K க்கும் மேற்பட்ட இணைப்புகளுடன் 40K க்கும் மேற்பட்ட கருத்துகள்
  • பொதிந்துக் கிடக்கும் நுண்ணறிவை அணுக, மொத்த கற்றல் தரவின் டெராபைட்டிற்குரிய நிகழ்வின் கோடிக்கணக்கான கிளிக் ஸ்ட்ரீம்

பல்வேறு வகையான போட்டி தேர்வின்(வகைகள்) திறன் தேர்ச்சியைப் பற்றி பார்க்கலாம். எங்கள் பகுப்பாய்விற்கு, நாங்கள் கீழ்கண்டவற்றை பயன்படுத்தினோம்:

  • JEE (இது இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் கவனம் செலுத்துகிறது),
  • NEET (இது இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் கவனம் செலுத்துகிறது),
  • மற்றும் K12 (இதில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் ஆகியவை அடங்கும்).

திறன் மதிப்பீடு

Embibe-யின் தரவு அறிவியல் ஆய்வகம், மாணவர்களின் மில்லியன் கணக்கான முயற்சிகளை சேகரித்துள்ளது. அதிலிருந்து அதீத செயல்திறன் கொண்ட குழு, கேள்விகளை தீர்க்க தேவையான 9 திறன்கள் கொண்ட வகையின் கீழ் குறியிடுகிறது. பகுப்பாய்வு, கணக்கீடு, அனுமானம், உள்ளுணர்வு, கையாளுதல், நியாபகம், வாய்மொழிப் புரிதல், காட்சிப்படுத்துதல் மற்றும் சுருக்கம் என மேற்கூறப்பட்ட திறன்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கேள்விகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திறன்களில் டேக் செய்யப்படலாம். Embibe-யின், ‘ஸ்மார்ட் டேக்கிங்’ அமைப்பை உருவாக்கியுள்ளது, இது மனிதர்களால் செய்யப்படும் டேக்கிங்(ஆசிரிய நிபுணர்களால் செய்யப்படுகிறது) மற்றும் தானியக்கமாக NLP மூலம் இயங்கும் டேக்கிங் ஆகிய இரண்டின் அடிப்படையில் கேள்விகளுக்கு டேகுளை ஒதுக்குகிறது.  

படம் 2 K12, JEE, மற்றும் NEET தொடர்பான கேள்விகளில் மாணவர்களின் சராசரி திறன் தேர்ச்சியை கண்காணிக்கும் அனிமேடெட் ரேடார் குறியை காட்டுகிறது.

படம் 2: K12, JEE, மற்றும் NEET தொடர்பான கேள்விகளில் மாணவர்களின் சராசரி திறன் தேர்ச்சியை கண்காணிக்கும் அனிமேடெட்  ரேடார்  குறியீட்டை காட்டுகிறது.

பெறப்பட்ட நுட்பங்கள் 

படத்தில் காணப்படுவது போல், பல்வேறு திறன் அடிப்படையில் டேக் செய்யப்பட்ட கேள்விகளின் வகைகள் தெளிவாக புலப்படுகிறது. மேலும் இந்த வேறுபாடு JEE மற்றும் NEET-க்கு இடையில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

  • JEE க்கு கணக்கீடு, பகுப்பாய்வு, கையாளுதல், அனுமானம் மற்றும் நினைவாற்றல் போன்ற திறன்களில் அதிக தேர்ச்சி நிலைகள் தேவை.
  • NEET க்கு காட்சிப்படுத்தல், சுருக்கமாக்குதல் மற்றும் நினைவாற்றல் திறன்களில் அதிக தேர்ச்சி தேவை.
  • சொல்லப்போனால், NEET உடன் ஒப்பிடும்போது JEE க்கு கணக்கீட்டு திறனில் மிக அதிக தேர்ச்சி தேவை. JEE கணிதத் திறனை சோதிக்கையில், NEET தேர்விற்கு அது அவசியமில்லை என்பது புரிகிறது.
  • மேலும், காட்சிப்படுத்தல் திறனுனில் JEE-யுடன் ஒப்பிடும்போது NEET-க்கு மிக அதிக தேர்ச்சி தேவைப்படுகிறது, ஏனெனில் NEET உயிரியல் திறனை சோதிக்கிறது, இது நிறைய வரைபடங்களைக் கொண்டுள்ளது அதே நேரம் JEE -இல் இது இல்லை .
  • இருப்பினும், 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்ட தேர்விற்கு, நினைவாற்றலை தவிர பெரும்பாலான பிற திறன்களில் மிதமான தேர்ச்சி இருந்தாலே போதுமானது. உண்மையில், நினைவாற்றல் என்பது அனைத்து ஸ்ட்ரீமிற்கும் தேவையான மிகவும் முக்கியமான திறனாகும். கேள்விகளைத் தீர்க்கத் தேவையான பல திறன்களுடன் அதை டேக் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்க. அனைத்து ஸ்ட்ரீம்களுக்கும், அறிவு, ஃபார்முலாக்கள், சமன்பாடுகள், வினைகள், வரைபடங்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகளை நினைவில்கொள்ள நினைவாற்றல் தேவைப்படுகிறது.

சாத்தியமான பயன்பாடுகள்:

திறன்மிக்க மாணவர்களின் முயற்சித் தரவுகளை கொணர்வதன் மூலம், திறன் தேர்ச்சி பற்றிய அனுபவ நுண்ணறிவுகளைப் பயன்படுத்தி மாணவர்களின் உள்ளார்ந்த திறன்களுக்கு ஏற்ப அவர்களுக்கு வழிகாட்ட முடியும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மாணவரின் திறமைகளைக் கண்காணிப்பதன் மூலம் அவர் ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட திறனில் திறமை வாய்ந்தவராக இருந்தால், நாம் வேறு பாடத்திட்டத்தில் கவனம் செலுத்துமாறு அந்த மாணவருக்கு பரிந்துரைக்கலாம்.

எடுத்துக்காட்டாக, பகுப்பாய்வு மற்றும் கணக்கீட்டு திறன்களில் உள்ளார்ந்த தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்களை, கணிதத்தில் கவனம் செலுத்த ஊக்குவித்து அவர்களை JEE தேர்விற்கு ஆயுத்தப்படுத்தலாம். மாறாக காட்சிப்படுத்தல் திறனில் அதீத திறமை உள்ள மாணவர்களை, உயிரியியலில் கவனம் செலுத்த ஊக்குவிக்கலாம். இதன் மூலம் அவர்களை NEET தேர்வுக்கு ஆயுத்தப்படுத்தலாம்.

சிறு வகுப்பில் இருந்தே திறன் தேர்ச்சி பற்றிய தரவு சார்ந்த நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு தலைமுறையிலும் பில்லியன் கணக்கான நபர்களைக் காப்பாற்ற முடியும். ஏனெனில், மாணவர்களின் இயல்பான திறன்களை மேம்படுத்துவதற்கு வழிகாட்டுவதன் மூலம் மாணவர்களை நாங்கள் திறமைப்படுத்துகிறோம், அதன் மூலம், அவர்களை வேலைவாய்ப்புகளுக்கு திறம்பட தயார் செய்கிறோம்.

Embibe தளத்தின், அவ்வப்போது மேம்படுத்தப்பட்ட கருத்துக்களால் இயங்கும் தரவுகள், மாணவர்களின் கற்றல் வெளிப்பாடுகளை மேம்படுத்த உதவும் என்று நம்புகிறது. முன்கூட்டியே ஒரு மாணவரினுள் பொதிந்து கிடக்கும் திறன்களை கண்டறிவதினால், சரியான நேரத்தில் தலையீட்டு, அவர்களுக்கு தேவையான திறன்களை நோக்கி வழிநடத்தி செல்வது, அந்தப் பயணத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.