தனிப்பயனாக்கப்பட்ட கற்றலுக்கான நுண்ணறிவு தேடல்
மாணவர்கள் தேடும் தகவலை அவர்களுக்கு வழங்கும்போது, இரண்டு விதமான பயனர் அனுபவத்திற்கான முன்னுதாரணங்கள் இருக்கின்றன. ஒன்று, மெனு-அடிப்படையில் தகவல்களை கொடுப்பது. இன்னொன்று, “தேடல்” இது மாணவர்களின் கேள்விக்குரிய கருத்தின் அடிப்படையில் உள்ளடக்கத்தை வழங்குவது.
இன்று, நாம் பெரும்பாலும் தேடுதல் முறையில் தான் இணையதளத்தை இயக்கிக் கொண்டிருக்கிறோம். என்னதான் மெனு அடிப்படையிலான அமைப்பின் மூலம் தேடும் தகவலை நேரடியாக பெற்றாலும், குறைந்த தலைப்புகளை கொண்ட மெனு பட்டியலில், வானளவு பரந்து விரிந்து கிடக்கும் தகவலை ஆராய்ந்து பெறுவது என்பது சந்தேகமே. மேலும் மெனுக்கள் மற்றும் டேப்களின் குவியல்களில் கருத்துக்களை தேடுவது என்பது கடினமான மற்றும் நேரம் விரயம் செய்யும் வேலையாக இருந்து வருகிறது. மேற்க்கூறிய குறைபாடுகளினாலேயே, Embibe தளம் மெனுக்களின் அடிப்படையில் இல்லாமல் தேடல்-அடிப்படை UI முறையில் வடிவமைப்பது என்பது மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாக இருந்தது.
ஒரு தளத்தை வடிவமைப்பதன் கண்ணோட்டத்தில் சொன்னால், தேடல் அடிப்படையிலான UI நிகழ்கால நடைமுறைக்கு சாத்தியமானது. ஏனென்றால், இந்த வடிவம் தனிப்பட்ட ஒவ்வொரு பயனருக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் திறமை உடையது. தினம், தினம் நூற்றுக்கணக்கான பாடத்திட்டங்களையும், ஆயிரக்கணக்கான தேர்வுகளுக்கான தகவல்களையும் சேகரித்து, எங்கள் தளத்தை மேலும் நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி கொண்டே இருக்கிறோம். எனவே, எங்கள் தளத்தை விட மிக சிறந்த, தனிப்பயனாக்கப்பட்ட, மாணவர்களுக்கு தேவையான தகவல் தேடும் முறை வேறில்லை என்றே கூறினால் மிகையாகாது. எனவே மாணவர்களின் தகவல் தேவைகளை விரிவாகவும் அவர்களுக்கு ஏற்றவாறும் செய்ய முடிகிறது.
முன்பு கூறியது போல், எங்கள் Embibe தளம், கடந்த 8 வருடங்களாக மாணவர்களுக்கு தேவையான தரவுகளை சேகரித்து வருகிறது. இதுவே “தேடல்” முறையில் இயங்கும் எங்களது தனிப்பயனாக்கப்பட்ட தளத்தின் ஆணிவேர் என்றால் மிகையாகாது. முடிவுகளை பெறும் வரை மாணவர்கள் கேட்கப்படும் கேள்வியின் அமைப்பிற்கான இயக்கத்தை படம் 1 காட்டுகிறது. Embibe உருவாக்கிய முந்தைய மற்றும் பிந்தைய செயலாக்க ஃபிரேம்வொர்க்ஸ் மூலம் மாணவரின் பார்வை, கேள்வியை மாற்றி எழுதுதல், அவர்களின் நோக்கம் கண்டறிதல், மல்டி-பாஸ் ரிட்ரிவல், பதிலை மீண்டும் மதிப்பிடுதல் மற்றும் கேள்வி தெளிவின்மை ஆகியவற்றை கையாளும் எலாஸ்ட்டிக்சர்ச் மூலம் Embibe தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்க தேடல் இயக்கப்படுகிறது. அமைப்பின் தனிப்பட்ட கூறுகள் மற்றும் செயல்திறன் அளவீடுகள் பற்றிய விவரங்கள் இந்தக் கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டவை.
இந்த தேடல் முறையானது மாணவர்களின் கேள்வியின் அடிப்படையில் தரவுகளை வழங்குகிறது. அதற்கும் மேல், கேட்கப்பட்ட கேள்வி சார்ந்த தரவுகளையும் அடுத்தத்தடுத்து வரிசைப்படுத்தப்படுகிறது. இந்த தேடல் முடிவுகள், ஒரு குறிப்பிட்ட மாணவரின் முந்தைய தரவுகள், தேடல்கள், மதிப்பெண்கள் போன்ற 25 காரணிகளின் அடிப்படையிலும் அமைந்திருக்கும்.
கேள்வி எண் டெம்பிளேட் (QNT) தேடல்: இது Embibe தளத்தின் தனித்துவமான ஒரு அம்சம். ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் கேள்வியை நேராக “தேடல்” பட்டியில் தேடி அதற்கான விடையையும் அதை தீர்க்கும் முறையையும் உடனே பெறலாம். இந்த அம்சம், நெருங்கி வரும் தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். மேலும், மாணவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த அவர்களின் முந்தைய உபயோகத்தின் அடிப்படையில் புதிய தரவிற்கான பரிந்துரைகளும் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, போதிய தரவு கிடைத்தாலோ, அல்லது போதிய தரவு கிடைக்காத சந்தர்ப்பங்களிலோ, அந்த மாணவர்களின் முந்தைய உரையாடலை பொறுத்து, மாணவர்கள் அவர்களது நேரம், இலக்கை அடைவதற்கு உதவும் உள்ளடக்கத்திற்கான பரிந்துரைகளும் காட்டப்படுகின்றன.
தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் இரு வகைப்படும்-ஒன்று, ஒரு குறிப்பிட்ட மாணவர் மற்ற மாணவர்களைவிட குறைந்த மதிப்பெண்களை வாங்கியிருக்கும் தரவுகளின் பரிந்துரைகள். மற்றொன்று, முதலிடம் பெற்றவர்கள் தேர்வில் செய்த தவறுகள், பெரும்பாலான மாணவர்களின் கவனக்குறைவான தவறுகள் போன்ற ஒழுக்கநெறி தொடர்பான முக்கிய கேள்வி பதில்கள் அடங்கிய பயிற்சிகளின் பரிந்துரைகளாகும். இந்த பயிற்சிகள் குறிப்பிட்ட பயனரின் ஒழுக்கநெறி இடைவெளிகளை நிவர்த்தி செய்ய உதவுகிறது.