நுண்ணறிவு மிகுந்த உள்ளடக்கத்தை உட்செலுத்துதல்

நுண்ணறிவு மிகுந்த உள்ளடக்கத்தை உட்செலுத்துதல்

Embibe தளத்தில் வரம்பற்ற கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளிக்க முடியும் என்று நாங்கள் வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை. Embibe-யில் மாணவர்கள் பயிற்சி செய்யவும், மதிப்பீட்டு டெஸ்டினை எழுதவும் அதிக அளவிலான கேள்விகளின் தரவு தொகுப்பு கிடைக்கிறது. அமைப்பில் இந்த கேள்விகளை உட்செலுத்துதல் என்பது மிக கடினமானது மட்டுமின்றி நேரம் விரய செயல்முறையாகும்.

முன்பெல்லாம், இந்த தரவுத்தொகுப்பு மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அதாவது அதை அவர்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கக்கூடிய பல்வேறு கேள்வித் தொகுப்புகளிலிருந்தோ அல்லது நம் கூட்டணி நிறுவனங்களுடன் இணைவதன் மூலம் கேள்விகளை தயாரித்தனர். அவர்கள் இந்த கேள்விகளை இணைய அடிப்படையிலான UI-இல் கையால் தட்டச்சு செய்வார்கள். பின்னர், தரவு Embibe-யின் தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகிறது. அதை மாணவர்கள் அணுகுவதற்கு முன் மற்ற கீழ்நிலை தொகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

தரவு ஆபரேட்டர்கள் பின்பற்றும் கேள்வி உள்ளீட்டு செயல்முறை என்பது, பொதுவாக பின்வரும் பல தீவிர நடவடிக்கைகளை கொண்டது:

  • கேள்வி வகைகளை அடையாளம் காணுதல்,
  • கேள்வி அமைப்பின் தகவலை தட்டச்சு செய்தல், 
  • கணித மற்றும் அறிவியல் குறிப்புகள் மட்டுமின்றி குறியீடுகளையும் வடிவமைத்தல்,
  • கேள்விகளில் படங்கள் மற்றும் வரைபடங்களை அடையாளம் காணுதல்,
  • சரியான தெளிவுத்திறனில் படங்களை பிரித்தெடுத்தல்,
  • படத்திற்கான Tag மூலம், கேள்விகளில் அவற்றின் இருப்பிடத்தைக் குறிப்பிடுதல்,
  • ஒற்றை மற்றும் பல விடைகளை தேர்வு செய்யும் கேள்வி வகைகளுக்கான பதில்களை பட்டியலிடுதல்,
  • சரியான விடை வழங்கப்பட்டால் பதிவுசெய்தல், மற்றும்
  • பதிவு ஆவணங்கள், ஹிண்ட்கள் மற்றும்/அல்லது குறிப்புகள்  போன்ற  கேள்வியைத் தீர்ப்பதற்கான இதர தகவல்களை பதிவு செய்தல்.

இந்த செயல்முறை இப்போது தானியக்கத்திற்கு ஏற்றதாக இருப்பதால் கருத்துக்கள் உட்செலுத்தலை எளிதாக்கி செலவையும் குறைக்கிறது. நூற்றுக்கணக்கான பாடத்திட்டங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான தேர்வுகளுக்கு நம் உள்ளடக்கத்தை விரிவுபடுத்துவதால், தானியக்க உள்ளடக்கம் மற்றும் கேள்வி உட்செலுத்துதல், காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

Embibe, அதன் சொந்த உட்செலுத்தல் அமைப்பை உருவாக்கியுள்ளது – இது பல உள்ளீட்டு டெம்பிளேட்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஹைபிரிட் பார்சர் ஃபிரேம் வொர்க் ஆகும். கட்டமைப்பின் அனைத்து மாதிரிகளும் சுயமாக உருவாக்கப்பட்டது. இது எளிதாக மேம்படுத்துவதுதல், மாற்றல் பணியை எளிதாக்குகிறது. ஒரு புதிய டெம்பிளேட்டை உட்செலுத்தும் தேவை ஏற்படும் போது, ஒவ்வொரு மாதிரியும் தோராயமாக தனித்தனி டெவலப்பர்களால் புதுப்பிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர்கள் பார்சர்/எக்ஸ்ட்ராக்டர், ஸ்க்ரிப்ட்கள் மற்றும் பொருந்தும் டெக்ஸ்ட் பேட்டர்ன் போன்றவற்றையும் புதுப்பிக்கின்றனர்.

இந்த குறிப்பிட்ட படியை மனிதர்கள் செய்யக்கூடியதாக இருப்பினும், உட்செலுத்த வேண்டிய கருத்து உள்ளடக்கம் மற்றும் புதிதாக உட்செலுத்தும் டெம்பிளேட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய தீர்வுகளின் வேகமும் நாம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கிறது. கீழே காட்டப்பட்டுள்ள படம் 1 ஹைபிரிட் பார்சர் ஃபிரேம் வொர்க் அமைப்பின் பல துணை அமைப்புகளை காட்டுகிறது.  

கீழே உள்ள அட்டவணை 1 இல் காட்டப்பட்டுள்ளபடி, கட்டமைப்பின் செயல்திறன் நினைவுக்கூரல் மற்றும் துல்லியம் எங்களால் கணக்கிடப்பட்டது. ஏற்றுக்கொள்ள கூடிய துல்லியத்தன்மையின் அளவை தேவைப்படும் நினைவுகூரல் அளவினை கட்டுப்படுத்துவதன் மூலம் ஈடுகட்டலாம்.

படம் 1: தானியக்க கருத்து உட்செலுத்துதலுக்கான Embibe ஹைபிரிட் பார்சர் ஃபிரேம் வொர்க்கிற்கான திட்ட கண்ணோட்டம்
டெம்ப்ளேட்எண்ணிக்கைநினைவுக்கூரல்துல்லியம்
ஒற்றை பதில் வினா 1341943.92%96.70%
பல தேர்வு வினா156256.53%95.52%
கூற்று-காரணம்107851.95%95.36%
வாக்கிய அடிப்படையிலான கேள்வி265852.26%86.68%
நெடுவரிசை-பொருத்தம் 70661.47%88.39%
எண்-பதில்55568.29%79.82%
மொத்தம்1997847.74%94.44%
அட்டவணை 1: டெஸ்ட் தரவில் தானியக்க உட்செலுத்தலின் செயல்திறன்