EMBIBE மதிப்பீட்டு அளவீடு: கற்றல் வெளிப்பாட்டின் முன்னேற்றத்திற்கான இயந்திர கற்றல்

EMBIBE மதிப்பீட்டு அளவீடு: கற்றல் வெளிப்பாட்டின் முன்னேற்றத்திற்கான இயந்திர கற்றல்

EMBIBE தளத்தில், நாங்கள் மதிப்பாய்வு என்பது முன்னேற்றத்திற்கான ஆணிவேர் என்று நாங்கள் மனதார நம்புகிறோம் – எதை மதிப்பாய்வு செய்ய முடியுமோ அதை நம்மால் மேம்படுத்திக்கொள்ள முடியும். Embibe மதிப்பீட்டு அளவீடு என்பது தேர்வில் மதிப்பெண் எடுக்கும் ஒரு மாணவரின் திறனைக் அளவிடும் ஒரு எண் அளவுருவாகும். Embibe மதிப்பீட்டு அளவீடு பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ளது:

  • பிரதிபலிப்பு: Embibe மதிப்பீட்டு அளவீடு என்பது மாணவரின் செயல்திறனில் மறைந்திருக்கும் பண்புகளின் அடிப்படையில் ஒரு மாணவரின் திறனை பிரதிபலிப்பாக இருத்தல் வேண்டும்.
  • முன்கணிப்பு: இது ஒரு மாணவரின் செயல்திறனின் தற்போதைய போக்கை கணிக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
  • துல்லியத்தன்மை: ஒரே ஒரு கெட்ட அல்லது நல்ல டெஸ்ட் ஒரு மாணவரின் மதிப்பீட்டு அளவீட்டை மோசமாக பாதிக்க கூடாது.
  • இயல்பாக்கம்: இது பல்வேறு டெஸ்ட்களின் கடினத்தன்மைக்கு ஏற்ற காரணியாக இயல்பாக்கப்பட வேண்டும்.

பின்வரும் கருத்தாய்வுகளைப் பயன்படுத்தி அளவுருக்களைப் பெறுவதன் மூலம் மாணவர்களின் மதிப்பீட்டு அளவீட்டை கணக்கிடுவதற்கான ஒரு வழிமுறையை Embibe உருவாக்கியுள்ளது :

  • உட்பொதிந்திருக்கும் பண்புகள்: உட்பொதிந்திருக்கும் பண்புகள் அல்லது அம்சங்கள் மாணவர்களினுள் புதைந்து கிடக்கும் திறனை, Embibe மதிப்பீட்டு அளவீட்டின் மூலம் பிரதிபலிக்க செய்கின்றன. இந்த உட்பொதிந்த பண்புகள், மாணவர்கள் டெஸ்ட் மற்றும் பிராக்ட்டிஸ் பிரிவுகளை முயற்சிக்கும் போது, அவர்கள் முயற்சித்த நிகழ்வுத் தரவுகளிலிருந்து பெறப்படுகிறது.
  • சிறந்த பிரிவுகள்: N என்பதை சிறந்த டெஸ்ட் மற்றும்/அல்லது பிராக்ட்டிஸ் பிரிவுகளாக எடுத்துக்கொண்டால், N கட்டமைக்கக்கூடியதாக இருக்கும்போது, Embibe மதிப்பீட்டு அளவீடு, மாணவரின் செயல்திறனை பிரதிபலிக்கக் கூடியதாகவும் வலுவானதாகவும் இருக்கும். மேலும், அதிக மதிப்பெண் பிரிவுகளிலிருந்து குறைந்த மதிப்பெண் பிரிவுகள் வரை முக்கியத்துவத்தின் அளவை நீக்க ஹார்மோனிக் முன்னேற்றம் பயன்படுத்தப்படுகிறது.
  • சமீபத்திய பிரிவுகள்: முன்பு K டெஸ்ட்கள் மற்றும்/அல்லது பிராக்ட்டிஸ் பிரிவுகளை கொண்ட நகரும் விண்டோ, இப்போது Embibe மதிப்பெண்ணை கணிக்க கூடியதாக மாற்றப்பட்டு, மாணவருடைய தற்போதைய திறனைப் பிரதிபலிக்கும் படி மேம்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பிரிவுக்கு பிறகும், சாதாரண பிரிவிற்குரிய மதிப்பெண் சிறந்த போக்கைக் காட்டினால், கூடிய விரைவில் மாணவர்களின் கற்றல் திறன் செழித்தோங்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

Embibe மதிப்பீட்டு அளவீடு, மூன்று செங்குத்து அச்சுகளின் அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது – கற்றல், ஒழுக்கநெறி மற்றும் டெஸ்ட் எழுதுதல். இந்த வெவ்வேறு அச்சுகள் ஒரு மாணவரினுள் மறைந்திருக்கும் பண்புகளான கற்றல் திறன், ஒழுக்கநெறி விகிதம் மற்றும் டெஸ்ட் எடுக்கும் திறன் ஆகியவற்றைக் கணிக்கிறது.

Embibe மதிப்பீட்டு அளவீடு ~ கற்றல் அளவீடு + ஒழுக்கநெறியின் அளவீடு + டெஸ்ட் -எடுத்தலுக்கான அளவீடு 

இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வின் படி, பல கல்வி ஆண்டுகளில் கேட்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான டெஸ்ட் பிரிவுகளை நாங்கள் மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளோம். ஒரு மாணவர், வரம்பிக்குற்பட்ட குறைந்தபட்ச நேரத்திற்கு, குறைந்தபட்ச கேள்விகளுக்கு பதிலளிதிருந்தால் மட்டுமே டெஸ்ட் பிரிவு செல்லுபடியாகும்.

கற்றல் அளவீடு, பாடத்திட்டத்தின் அறித்திறனை கையாள்கிறது. உயர்-தனிப்பயனாக்கப்பட்ட கற்றலில் பெரும் ஃபீட்பேக்கில் கவனம் செலுத்துவதன் மூலம் மாணவர்கள் தொடர்ந்து டெஸ்ட்களை எழுதி, அவர்களது கல்வித் தரத்தை மேம்படுத்தலாம் – ஒரு மாணவரின் கல்வி பலவீனங்களுக்கு ஏற்ப அதிக புரிதலை ஏற்படுத்தும் கேள்விகள் அடங்கிய தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி தொகுப்புகள் வழங்கப்படும். இதன் விளைவாக, படம் 1 இல் காணப்படுவது போல கல்வித் தரத்தில் ஒரு நிலையான முன்னேற்றத்தை காணலாம்.

படம் 1: Embibe மதிப்பீட்டு அளவீடு மற்றும் கல்வி அளவீட்டின் முன்னேற்றம்

ஒழுக்கநெறி அளவீடு, மாணவரின் எண்ணத்தை கையாள்கிறது – ஒரு மாணவர் அதிக மதிப்பெண் பெற எவ்வளவு உந்துதல், கவனம், அர்ப்பணிப்பு தேவை என்பதை சொல்கிறது. மாணவர்களின் ஒழுக்கநெறி பண்புகளை முதலில் தீர்மானிப்பதன் மூலம் மாணவர்களின் ஒழுக்கநெறி விகிதத்தை மேம்படுத்த Embibe உதவுவது மட்டுமின்றி அதை முன்னேற்றுவதற்கு தேவையான எல்லா இலக்குகளையும் அமைக்கிறது [1]. ஒரு மாணவர் அவரது ஒழுக்கநெறியில் மறைந்திருக்கும் குறைபாடுகளை அறிந்தப்பின், அதில் தொடர்ந்து கவனம் செலுத்தி மாணவர்களின் ஒழுக்கநெறியை மேம்படுத்த முடியும். படம் 2-இல் காட்டப்படுவது போல, ஆரம்ப ஒழுக்கநெறி முன்னேற்றம் மிக வேகமாக நிகழ்கிறது. அதன் பின், ஒவ்வொரு தொடர்ச்சியான டெஸ்டிற்குப் பிறகும் மெதுவான, ஆனால் நிலையான முன்னேற்றம் காணப்படுகிறது.

படம் 2:  Embibe மதிப்பீட்டு அளவீடு மற்றும் ஒழுக்கநெறி அளவீட்டின் முன்னேற்றம்

டெஸ்ட்-எடுக்கும் அளவீடு, டெஸ்ட் பிரிவில் பதிலளிக்க வேண்டிய நேரம் மற்றும் எந்த கேள்விகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது போன்றவற்றை கையாள்கிறது. டெஸ்ட் எழுதும் மாணவர்களின் விகிதத்தை மேம்படுத்துவது தானாகவே Embibe மதிப்பீட்டு அளவீட்டை மேம்படுத்துகிறது. ஏனெனில், சிறந்த டெஸ்ட் எழுதும் உத்திகள் கற்றல் வெளிப்பாடுகளை அதிகரிக்கிறது. படம் 3-இல் காணப்படுவது போல, டெஸ்ட் எடுக்கும் விகிதத்தில் முன்னேற்றம் ஆரம்பத்தில் மெதுவாக இருக்கிறது. ஆனால், மெதுவாக இருந்தாலும் நிலையான வளர்ச்சி இங்கும் காணப்படுகிறது.

படம் 3: Embibe மதிப்பீட்டு அளவீடு மற்றும் டெஸ்ட் எடுக்கும் அளவீட்டின் முன்னேற்றம்

கல்வி, ஒழுக்கநெறி மற்றும் டெஸ்ட் பதிலளிக்கும் அளவீடு என்று Embibe மதிப்பீட்டு அளவீட்டை பிரிப்பதன் மூலம் கற்றல் வெளிப்பாடுகளை மேம்படுத்துவதற்கான பயனுள்ள பரிந்துரைகளுக்கும் வழிவகுக்கிறது.

பரிந்துரைகள்:

Faldu K., Thomas A., Donda C. and Avasthi A., “Behavioural nudges that work for learning outcomes”, Data Science Lab,

  • Faldu K., Thomas A., Donda C. and Avasthi A., “Behavioural nudges that work for learning outcomes”, Data Science Lab, Embibe, https://www.embibe.com/ai-detail?id=2, 2016.
  • Faldu, K., Avasthi, A. and Thomas, A., Indiavidual Learning Pvt Ltd, 2020. Adaptive learning machine for score improvement and parts thereof. U.S. Patent 10,854,099.
  • Donda, C., Dasgupta, S., Dhavala, S. S., Faldu, K., & Avasthi, A. (2020). A framework for predicting, interpreting, and improving Learning Outcomes. arXiv preprint arXiv:2010.02629.