அறிவாற்றல் மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின் மூலம் ஒரு மாணவரின் மதிப்பெண் ஈட்டும் திறனை அளவிடுதல்
Embibe மதிப்பீட்டு அளவீடு என்பது ஒரு மாணவர் ஒரு டெஸ்டில் எவ்வளவு மதிப்பெண் பெற முடியும் என்பதை கணிக்க உதவுகிறது
Embibe மதிப்பீட்டு அளவீடு என்பது ஒரு மாணவர் ஒரு டெஸ்டில் எவ்வளவு மதிப்பெண் பெற முடியும் என்பதை கணிக்க உதவுகிறது
“நாம் அனைவரும் மேதைகளே. ஆனால் ஒரு மீனை அதன் மரமேறும் திறனை வைத்து மதிப்பிட்டால், அது தன் வாழ்நாள் முழுவதும் தன்னை ஒரு முட்டாளாகக் கருதி வாழும்”
உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் பொதுவாகக் அனுபவிக்கும் கஷ்டத்தை இந்த மேற்கோள் எடுத்துக் காட்டுகிறது. கல்விசார் அமைப்புகள் மற்றும் பணியமர்த்துபவர்கள் பொதுவாகத் தேர்வு முறைகளை மட்டுமே தனித்தகுதியின் சான்றாகக் கருதுகின்றனர். ஆண்டு முழுவதும் ஒரு மாணவன் சிறப்பாக அல்லது மோசமாக இருந்தாலும் அந்த ஒரு நாள் தேர்வில் அவரது பங்களிப்பே, ஒரு மாணவர் தேர்வில் என்ன செய்கிறார் என்பதே முதன்மையான அல்லது மிக முக்கிய மதிப்பீட்டு முறையாகக் பார்க்கப்படுகிறது. இதற்கு மேலும் துயரம் சேர்க்கும் விதமாக, தரமான ஆசிரியர்களின் தேவை மற்றும் பெறுதல் இடையேயுள்ள ஒரு பெரிய இடைவெளி குறைவான மாணவர்-ஆசிரியர் விகிதத்துக்கு வழி வகுத்துள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட, தனிச் சிறப்பு வாய்ந்த கவனத்தை ஆசிரியர்களால் திறம்பட வழங்க முடிவதில்லை. இச்சிக்கல்களில் இருந்து மீண்டு மாணவர்கள் தங்கள் முழுத் திறனை எட்ட, அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்களுக்குத் தேவைப்படும்போது, அவர்கள் ஏற்கும் விதத்தில் நாம் வழங்க வேண்டும்.
இதை எட்ட, ‘Embibe மதிப்பீட்டு அளவீடு’ எனும் அறிவியல் அளவுருக்களைப் பயன்படுத்தி, தேர்வில் மாணவர்களின் பங்களிப்புத் திறனை Embibe அளவிடுகிறது. ஒரு மாணவரின் மதிப்பெண் ஈட்டும் திறனானது அவரது கல்வித் திறன் மற்றும் நுணுக்கமான அதே சமயம் வெளியில் காணப்படாத பல ஒழுக்கநெறிகளின் குணவியல்புகளை பொறுத்தது என்று Embibe கருதுகிறது. எந்தக் கூறுகள் முறையாக இல்லாததன் காரணமாகத் தேர்வில் குறைந்த மதிப்பெண் ஏற்படுகிறது என்பதை அறிய இச்சோதனை எங்களுக்கு உதவுகிறது.
‘Embibe மதிப்பீட்டு அளவீடு’ என்பதன் இந்த முக்கியக் கூறுகள் எங்கள் அமைப்பு உடனடியாகப் பரிந்துரைகளை வழங்க வழி வகை செய்கிறது:
கல்வித்தகுதி அளவீடு: இது மாணவர்களின் கல்வித் திறனைக் குறிக்கிறது. Embibe-யில் நாங்கள் ஒரு மாணவரின் கல்வித் திறனை அவரது ‘கருத்தியல் தேர்ச்சி’(‘கான்செப்ட் மாஸ்டரி’) உதவியுடன் கணக்கிடுகிறோம். வீடியோக்களை காணுதல், தேர்வுகளில் பங்கேற்றல் மற்றும் தேர்வு முடிவுகளை மதிப்பாய்வு செய்தல் போன்று மாணவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு செயல்பாடுகளின் அடிப்படையில் ஒரு மாணவரின் கருத்தியல் புரிதலை ‘கருத்தியல் தேர்ச்சி அளவிடுகிறது.
தேர்வில் பங்கேற்கும் திறன் அளவீடு என்பது ஒரு மாணவரின் தேர்வெழுதும் திறனைக் குறிக்கிறது. மற்ற ஒத்த அம்சங்களுடன் கவனத்தில் கொண்ட கேள்விகளின் எண்ணிக்கை மற்றும் மறு மதிப்பாய்வுக்காகக் குறிக்கப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கை போன்றவை இந்த வகையில் கணக்கில் கொள்ளப்படுகின்றன.
முயற்சியின் அளவீடு: இது ஒரு மாணவர் கற்பதற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சியின் அளவைக் குறிக்கிறது. தேர்வில் மதிப்பெண் பெற மாணவர் கொண்டுள்ள திறனை அறிய முயற்சியின் அளவீடு அனுமதிக்கிறது. பிராக்டிஸ் பிரிவுகளின் எண்ணிக்கை, பிராக்டிஸில் செலவழித்த மொத்த நேரம் மற்றும் பிற ஒத்த செயல்பாடுகள் ஆகியவை இந்த வகையின் கீழ் நேரடியாகக் கவனத்தில் கொள்ளும் சில அம்சங்கள் ஆகும்.
உடனடி பரிந்துரைக்கான இயந்திர கற்றல் மாதிரி
இயந்திர கற்றல் மாதிரியானது உண்மை நிலையின் தோராயமான கணிப்பீடாகும். உண்மை நிலையை அளவு சார்ந்து அல்லது இயல்பான வகையில் உறுதிப்படுத்தும் ஓர் ஊடகமாக இந்தக் கணிப்பீட்டை நாம் கருத்தில் கொள்ளலாம். முடிந்தவரை விளக்கக்கூடிய மாதிரிகளைப் பயன்படுத்துவது வலியுறுத்தப்படுகிறது. வெளிப்படையாக அறிய முடியாத ஆழமான கற்றல் மாதிரிகளுக்கு விளக்கங்களை வழங்குவதிலும் ஒரு திடீர் எழுச்சி ஏற்பட்டுள்ளது. பொருள் விளக்கம் வழங்கும் திறனைக் கருத்தில் கொண்டு, வளமான மற்றும் அதிக அளவு விளக்கம் வழங்கும் அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்ட ‘Embibe மதிப்பீட்டு அளவீடு’, மாணவர்கள் கருத்துக்களை அறிந்து கொள்வதில் கொண்டுள்ள பலவீனத்தில் இருந்து மீள்வதையும், ஒழுக்கநெறி சார்ந்த கருத்துக்களை மிகவும் நுணுக்கமான மற்றும் செயல்-சார்ந்த முறையில் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட உடனடிப் பரிந்துரைகளை வழங்குகிறது.
எடுத்துகாட்டாக, ஒரு மாணவன் அதிக கற்றல் திறன், படிக்கும் ஆர்வம் கொண்டிருப்பின் ஆனால் தேர்வு எடுக்கும் ஆர்வம் இல்லாதவராக இருந்தால், இது என்ன கூறும் என்றால், “உங்களுக்கு தெரியாத பாடத்தில் உள்ள கேள்விகளில் அதிக நேரம் செலவிடுகிறீர்கள். இதில் செலவிடும் நேரத்தை குறைத்து உங்கள் தேர்வை எடுப்பதற்காக நிறைய நேரத்தை சேமியுங்கள்”. வெவ்வேறு சூழ்நிலைகளை பொறுத்து வெவ்வேறு கருத்துரைகள் வழங்கப்படுகிது.
Embibe மதிப்பீட்டு அளவீடு என்பது AI- யினால் இயக்கப்பட்டு, மாணவர்களின் கற்றல், ஒழுக்கநெறி, முயற்சிகளின் தன்மைகளை வெளிப்படுத்தி, ஒவ்வொரு மாணவருக்குமான தனிப்பயனாக்கப்பட்ட மேற்பார்வையை வழங்க உதவுகிறது.மேலும், AI-யின் உதவியோடு பயனரின் பொருளுணர்வை திறம்பட ஆராய்ந்து துல்லியமான முடிவுகளை தந்திடும்.
ரெபெரென்ஸ்:
[1] Keyur Faldu, Aditi Avasthi, and Achint Thomas. Adaptive Learning Machine for Score Improvement and Parts Thereof, US Patent No. 10854099 B2.
[2] C. Rudin. Stop Explaining Black-Box Machine Learning Models for High Stakes Decisions and Use Interpretable Models Instead. arXiv e-prints, 11 2018.