திறமை அடிப்படையிலான கற்றல் மூலம் அடுத்த கருத்துக்கு செல்ல மாணவரின் தயார்நிலையை அளவிடுதல்

இதில், கற்றுக்கொள்பவர்கள் மீது அறிவு திணிக்கப்படுவதில்லை. மாறாக, மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற வேகத்தில் கற்கிறார்கள்

வகுப்பறை அடிப்படையிலான பாரம்பரிய கற்றலில், கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு, ஒவ்வொரு மாணவரும் நல்ல மதிப்பெண் பெற்று அடுத்த வகுப்பு  நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள், ஆனால் அனைத்து மாணவர்களும் படிப்பில் ஒரே அளவிலான தேர்ச்சியைப் பெறுவதில்லை. சிலர் சிறந்த A+ தர மதிப்பெண்களையும், மற்றவர்கள் ஒவ்வொரு கற்றுக்கொள்பவரின் வெவ்வேறு திறன்களின் காரணமாக C அல்லது அதற்கும் குறைவான மதிப்பெண்களையும் பெறலாம். எனவே, ஒரு குறிப்பிட்ட காலத்தில், சிலர் மற்றவர்களை விட அதிகமாக கற்றுக்கொள்கிறார்கள்.

திறமை அடிப்படையிலான கற்றல் என்பது பின்வரும் முறையான சிந்தனையை குறிக்கிறது:

  1. கற்பித்தல்
  2. மதிப்பிடுதல்
  3. தரப்படுத்தல்                     
  4. கல்வி அறிக்கை

மாணவர்கள் முன்னேறும் போது கற்ற அறிவையும் திறமையையும் சித்தரித்துக் காட்ட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட தரங்களைப் பின்பற்றும் நவீன பள்ளிகளில், திறமை அடிப்படையிலான கற்றல் கல்வி எதிர்பார்ப்புகளை வரையறுக்கிறது மற்றும் படிப்புகள் அல்லது வகுப்பு நிலைகளுக்கான “திறமை” அல்லது “வல்லமையின்” பல பிரிவுகளை வரையறுக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் அல்லது தொழில் பாதைகளில் வெற்றிபெற அறிவு மற்றும் திறன்களைப் பெறுவதை உறுதி செய்வதே அதன் குறைந்தபட்ச குறிக்கோள். நிர்ணயிக்கப்பட்ட எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது, தேவையான செயல்திறன்களை அடைய உதவும் வகையில் கூடுதல் கல்வி உதவியுடன் கற்றுக்கொள்பவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Embibe பிராடக்ட்/அம்சங்கள்: லேர்ன், பிராக்ட்டிஸ், டெஸ்ட், எங்களுடன் தீர்வு காணுங்கள்

கற்றல் முடிவுகளில் கவனம் செலுத்தி, Embibe திறமை அடிப்படையிலான கற்றலை அதன் மாணவர்களுக்கு அறிவியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட ‘லேர்ன்’, ‘பிராக்ட்டிஸ்’ மற்றும் ‘டெஸ்ட்’ அம்சங்கள் மூலம் அவர்களின் நோக்கங்களையும் திறன்களையும் கண்காணிப்பதன் மூலம் திறம்பட பயன்படுத்துகிறது. Embibe என்ற AI அடிப்படையிலான தளம், கற்றல் செயல்முறையின் பல்வேறு நிலைகளில் தனிநபரின் செயல்திறன்களை விழிப்புடன் அங்கீகரித்து பதிவு செய்கிறது. இது முன்னரே தீர்மானிக்கப்பட்ட தொழில் இலக்கு அல்லது இலக்குகளை நோக்கி ஒவ்வொரு கற்றுக்கொள்பவரின் பயணத்தையும் துரிதப்படுத்த வெற்றியின் திட்டமிடல், உத்திகள் மற்றும் கருவிகளை அளவிடவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் வழங்கவும் உதவுகிறது.

திறன் அடிப்படையிலான கற்றல் அணுகுமுறையில் செயல்படும் Embibe-யின் முக்கிய அம்சங்களில் ஒன்றான ‘பிராக்ட்டிஸ்’, ஒவ்வொரு குறிப்பிட்ட கருத்திலும் மாணவர்கள் சிறந்து விளங்க உதவும் வகையில் கேள்விகளை சரியான முறையில் அமைத்து மற்றும் கேள்விகளின் கடின நிலைகளை அதிகரிப்பதன் மூலம் ஒரு சுய-வேக கற்றலை அனுமதிக்கிறது.

வலுவான திறன் அடிப்படையிலான கற்றல் மாதிரியை உறுதி செய்ய, Embibe பல்வேறு அளவுருக்களில் அதிக போட்டித்தன்மையுடனும் இலக்கு அடிப்படையிலும் செயல்படுகிறது. தன்னாட்சி பிரச்சனை தீர்க்கும் திறன்களுக்கான வாய்ப்புகள் ஒவ்வொரு மாணவரின் தேவைகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறது. நிகழ்நேர அறிக்கைகள், கருத்து வாரியான பலவீனத்தைக் கண்டறிதல், பாட-நிலை தேர்ச்சியைக் கண்டறிதல், மேம்பாட்டுப் பகுதிகளில் திறமையான ரிவிஷன் திட்டம், கேள்வி-நிலை பகுப்பாய்வு மற்றும் கருத்து-அளவில் விரிவான கற்றல் பொருள் ஆகியவை திறன் அடிப்படையிலான கற்றலை மேம்படுத்துகிறது.

’எங்களுடன் தீர்வு காணுங்கள்’ என்பது சிக்கல்களைத் தீர்ப்பதில் Embibe-யின் தனித்துவமான ஒரு வழியாகும். Embibe பாடத்திட்டத்தை சிறு சிறு டாபிக்குகள், கருத்துகள் மற்றும் திறன்களாகப் பிரித்துள்ளது. இது வலுவான மற்றும் பலவீனமான கருத்துக்களை ஆழமான அளவில் புரிந்துகொள்ளவும் தேவையான தனிப்பட்ட உதவியை வழங்கவும் உதவுகிறது. ஒரு மாணவர் தேர்ச்சி பெற வேண்டிய முக்கியமான கருத்துகளைப் புரிந்துகொள்ள ‘எங்களுடன் தீர்வு காணுங்கள்’ உதவுகிறது. கேள்வி நிலையில் குறிப்பைப் பார்த்த பிறகும் ஒரு மாணவரால் ஒரு கேள்வியைத் தீர்க்க முடியாவிட்டால், அவர்கள் ‘எங்களுடன் தீர்வு காணுங்கள்’ உதவியைப் பெறலாம், இது தீர்வுகள்/பதில்களை அடைய படிப்படியாக அவர்களுக்கு வழிகாட்டுகிறது. Embibe மேலும், படி மட்டத்தில் மைக்ரோ குறிப்புகளை வழங்குகிறது மற்றும் கடைசி முயற்சியாக கையில் உள்ள சிக்கலுக்கு விரிவான தீர்வையும் வழங்குகிறது.