ஒரு மாணவர் கருத்துக்களைப் புரிந்துகொள்ளும் திறனை ஆதரிப்பதற்கு தரவுகளை மேம்படுத்துதல்

ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட மேற்பார்வை மற்றும் உதவியை அறிவுறுத்தல் சாரம் வழங்குகிறது

ஒவ்வொரு மாணவரும் வித்தியாசமானவர்கள். அவர்கள் வெவ்வேறு கற்றல் குறிக்கோள்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அவர்களின் பலம், பலவீனம் மற்றும் தேவைகளிலும் வேறுபாடுகளைக் காணலாம். பயனுள்ள கற்றலுக்கு அவர்களின் தனிப்பட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் குறிப்பாக வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட மேற்பார்வை மற்றும் உதவி தேவை. சுருக்கமாக, கற்றல் செயல்முறை ஆசிரியரை மையமாகக் கொண்டிருப்பதைதை விட மாணவர்களை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். கற்றுக்கொள்பவருக்கு ஒரு பயிற்றுவிப்பாளர் அல்லது ஒரு அமைப்பால் உதவியை வழங்குவதற்கான இந்த குறிப்பிட்ட அணுகுமுறை அறிவுறுத்தல் சாரம் என்று அழைக்கப்படுகிறது.

அறிவுறுத்தல் சாரம் என்பது கற்றலை மேம்படுத்த மற்றும் ஒரு செயலில் தேர்ச்சி பெற, மாணவர்களை ஆசிரியர் ஆதரிக்கும் முறையாகும். மாணவர்கள் புதிய திறமைகளைக் கற்றுக் கொள்ளும்போது, மாணவர்களின் சிறப்புத் திறனையும் அறிவையும் வளர்ப்பதன் மூலம் ஆசிரியர் இதைச் செய்கிறார். கொடுக்கப்பட்ட செயல்களில் மாணவர்கள் முன்னேற்றங்களை காட்டத் தொடங்கும் போது, ஆசிரியர்களின் ​​ஆதரவுகள் படிப்படியாக நீக்கப்படும். இந்த கற்பித்தல் முறை, மாணவர்கள் தங்கள் கற்றலில் ஒரு முன்னுதாரணமான பங்கை எடுத்து செயல்பட இடமளிக்கிறது. இந்த கற்றல் சூழ்நிலையில், மாணவர்கள் கேள்விகளைக் கேட்கவும், கருத்துக்களை வழங்கவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் தங்கள் சக மாணவர்ளுக்கு உதவவும் அவர்களுக்கு சுதந்திரம் உண்டு. கற்றலின் முக்கிய நன்மைகளில் ஒன்று, அது  ஆதரவான கற்றல் நிலைக்கு உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட கோட்பாடை மாணவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை ஆசிரியர் அடையாளம் கண்டு கொள்ளும் போது அவர்களுக்கு இந்த வழிகாட்டுதல் செயல்முறையை செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.

கற்றல் வரம்புகளைக் கொண்ட மாணவர்கள் ஒவ்வொரு அடியிலும் அவர்கள் கவனிக்க வேண்டிய அடிப்படைக் கருத்துகளைப் பொதுவாக புரிந்து கொள்ளாததால் இந்த நிகழ்வு கண்டறியப்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகளை கடக்க, ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் ஒரு குறிப்பிட்ட செயலின், தனிப்பட்ட செயல்முறை விளக்கம்,  மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்க ஆசிரியர்களுக்கு உதவும்.

அறிவுறுத்தல் சாரம் திறமையான கற்றலை எளிதாக்கும் மூன்று அத்தியாவசிய அம்சங்களைக் கொண்டுள்ளது:

  1. கற்றுக்கொள்பவருக்கும் வல்லுநர் அமைப்பிற்கும் இடையே கூட்டு தொடர்பு இருக்க வேண்டும். இந்த தொடர்புகள் பயிற்றுவிப்பாளருக்கு, கற்றுக்கொள்பவர் அறிவு மற்றும் திறன்களின் அடிப்படையில் எப்படி இருக்கிறார் என்பதை நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது.
  2. கற்றுக்கொள்பவரின் அருகாமையில் உள்ள வளர்ச்சி மண்டலத்தில் கற்றல் நடைபெற வேண்டும். முந்தைய விஷயத்தில் கூறப்பட்டுள்ளபடி, கற்றுக்கொள்பவரின் தற்போதைய அறிவு நிலை பற்றிய முழுமையான புரிதல் தேவைப்படுவதால், கற்றுக்கொள்பவரின் தற்போதைய உணர்ச்சி, அறிவாற்றல் மற்றும் விருப்பமான நிலையை அடிப்படையாகக் கொண்ட வல்லுநர்/அமைப்பு, கற்றுக்கொள்பவர் தற்போதைய நிலையை விட மேம்பட்ட நிலையில் செயல்பட உதவும்.
  3. கற்றுக்கொள்பவர், வல்லுநர்/அமைப்பின் மேற்பார்வைகள் மற்றும் பரிந்துரைகளின்படி செயல்படத் தொடங்கியவுடன், முன்னேற்றம் அடைந்து, தேர்ச்சி அடையும்போது, சாரம் அல்லது ஆதரவு படிப்படியாக அகற்றப்பட்டு, அதனால் கற்றுக்கொள்பவர் அனைத்தையும் தானாக கையாள முடியும்.

இந்த கோட்பாடு நன்றாக செயல்பட, ஆசிரியர்கள் பின்வருவனவற்றைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்:

  1. கற்றல் பயிற்சியை  தேர்ந்தெடுத்தல்: தேர்ந்தெடுக்கும் பயிற்சி, கற்பவர்களின் வளர்ந்து கொண்டிருக்கும் திறனை அவர்கள் உபயோகிக்கும் படியாக இருக்க வேண்டும். மாணவர்களை ஆக்கிரமித்து வைப்பதற்கு கற்றல் பயிற்சியானது ஈடுபாட்டுடனும் உற்சாகமாகவும் இருக்க வேண்டும். மேலும், பயிற்சி மாணவருக்கு மிகவும் எளிதாகவோ அல்லது கடினமாகவோ இருக்கக்கூடாது.
  2. பிழை எதிர்பார்ப்பு: செயலைத் தேர்ந்தெடுத்த பிறகு, செயலில் பணிபுரியும் போது மாணவர்கள் செய்யக்கூடிய பிழைகளை ஆசிரியர் எதிர்பார்க்க வேண்டும். பிழைகளை எதிர்பார்ப்பது, தவறான திசைகளில் இருந்து மாணவர்களை சரியாக வழிநடத்த இந்த கோட்பாட்டிற்கு உதவுகிறது.
  3. கற்றல் பயிற்சியின் போது வழிகாட்டுதலின் பயன்பாடு: வழிகாட்டுதல் இரண்டு தனித்தனி வழிகளில் ஒழுங்கமைக்கப்படலாம். இது “எளிய திறன் பெறுதல்” அல்லது “ஆக்க முறை மற்றும் இயங்காற்றல்”.
  4. உணர்ச்சிபூர்வமான சிக்கல்கள் கவனிப்பு:  இந்த கோட்பாடு, அறிவாற்றல் திறனுடன் மட்டும் முடிந்துவிடாது இதனால் உணர்ச்சிபூர்வமான விஷயங்களையும் ஆதரிக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட பயிற்சியின் போது, ​​கற்பவர் அனுபவிக்கக்கூடிய ஏமாற்றம் மற்றும் ஆர்வ இழப்பை இந்த கோட்பாடு சமாளித்து கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். ஊக்குவித்தல் என்பதும் இதில் ஒரு முக்கியமான கூறு ஆகும்.

Embibe பிராடக்ட்/அம்சங்கள்: தனிப்பயனாக்கபட்ட சாதனைப் பயணம், அடுத்த கேள்வி அமைப்பு

Embibe தளத்தின் ‘தனிப்பயனாக்கப்பட்ட சாதனைப் பயணம்’, மூலம், ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் கற்றல் நிறை குறைகளை பொறுத்து தனிப்பட்ட கல்வி வழங்கப்படுகிறது. வெவ்வேறு மாணவர்களின் குறிப்பிட்ட கற்றல் தேவைகளைப் பொறுத்து, பொருத்தமான சிரம நிலையில் உள்ள  கேள்விகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் எந்த அத்தியாயத்திற்கும் எந்த நேரத்திலும் தங்கள் சொந்த டெஸ்டை உருவாக்கலாம், இது ஒவ்வொரு அத்தியாயத்திலும் தங்கள் சொந்த வேகத்தில் தங்கள் வலிமையை ஒப்பிட்டுப் பார்க்க அவர்களை அனுமதிக்கிறது. எங்களின் ‘எங்களுடன் தீர்வு காணுங்கள்’அம்சம் கேள்வி அளவில் குறிப்புகளையும், மாணவர்கள் கேள்விகளைத் தீர்க்க உதவும் படிநிலையில் மைக்ரோ-குறிப்புகளையும் வழங்குகிறது. ஒருவேளை மாணவர்கள் இன்னும் அதைத் தீர்க்க முடியவில்லை என்றால், ஒவ்வொரு கேள்விக்கும் விரிவான தீர்வுகள் வழங்கப்படுகின்றன; இது ஒரு தனிப்பட்ட ஆசிரியரை கொண்டிருப்பதைப் போன்றது, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கிடைக்கும் ஒரு வழிகாட்டி.

Embibe  மாணவர்களுக்கு ‘நேரடி ஆசிரிய உதவி’  மூலம் 24/7 App-யின் வழியாக வழிகாட்டுதலை வழங்குகிறது, அங்கு மாணவர்கள் தங்கள் கல்வி கேள்விகளை பதிவு செய்யலாம். Embibe-யின் வல்லுநர்கள் வழக்கமாக Chat ஆதரவு மூலம்  சில நிமிடங்களில்  சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்கள். Embibe-யில் , கல்வியின் மூலம் உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள் மற்றும் எங்கள் ஆதரவுக் குழு  அனைத்து மாணவர்களின் கேள்விகளையும் தீர்க்க கடினமாக உழைத்து அதைச் செய்கிறது.