• எழுதியவர் Vishanth V
  • கடைசியாக மாற்றப்பட்டது 24-08-2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்- Group I தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை-2022

img-icon

TNPSC குரூப் 1 தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை பற்றிய விளக்கங்கள்:

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி-I) பணிகள் அடங்கிய

பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமானம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 22.08.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம்
தேர்வின் பெயர் TNPSC
வலைத்தளம் www.tnpsc.gov.in
நிறுவப்பட்டது 1929
தலைமையகம் சென்னை
நோக்கம் தமிழ்நாடு அரசுப் பணிக்கு தேர்வு செய்தல்
வேலைவாய்ப்பு பகுதி தமிழ்நாடு
முகவரி தமிழ்நாடு பப்ளிக் சர்விஸ் கமிஷன் TNPSC சாலை, V.O.C.Nagar, பார்க் டவுன், சென்னை-600003, தமிழ்நாடு.

விண்ணப்பதாரர்கள் இந்த நேரடி நியமனம் செய்வதற்கான இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல் / வழிமுறைகள்/ வழிகாட்டு நெறிமுறைகள் தேர்வாணையத்தின் “விண்ணப்பதார்களுக்கான அறிவுரைகள்” ஆகியவற்றை நன்கு படித்து அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுகுறித்து இணையவழி விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான கடைசி தேதிக்கு முன் (ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின்) தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெளிவுபடுத்திக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒரு முறை பதிவு:

விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலங்களுக்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தை செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு  முறை பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கான நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு முறைப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். 

முக்கியமான நாட்கள் மற்றும் நேரம்:

அறிவிப்பு நாள் 21.07.2022
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி நாள் 22.08.2022
இணையவழி விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம் 27.08.2022 – 12.01 மு.ப. முதல்
29.08.2022 – 11.59 பி.ப. வரை
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் 30.10.2022 முற்பகல் 9.30 மணி முதல்
பிற்பகல் 12.30 மணி வரை
முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும்.

குறிப்பு:

  • விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • பதிவு செய்வதற்கு மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம். முடிவுகள் அறிவிக்கப்படும் வரை மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண்ணை கட்டாயம் செயலில் வைத்திருக்க வேண்டும். உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லை ரகசியமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்படுகிறீர்கள்.
  • TNPSC எழுத்துத் தேர்வு, நேர்காணல் அழைப்புக் கடிதங்கள், இதர தகவல்கள் போன்றவற்றிற்கான ஹால் டிக்கெட்டுகளை (சேர்க்கைக்கான வரவேற்பு) பதிவு செய்யப்பட்ட / கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு மட்டுமே அனுப்பப்படும்.
  • விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்பித்த பதவி, சமூகப் பிரிவு, பிறந்த தேதி, முகவரி, மின்னஞ்சல் ஐடி, தேர்வு மையம் போன்ற ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் இறுதியானதாகக் கருதப்படும் மற்றும் எந்த மாற்றங்களும் மீண்டும் அனுமதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 22.08.2022.  சில குறிப்பிட்ட தகவல்கள் உறுதியானவை மற்றும் நிலையானவை மற்றும் அவற்றை திருத்த முடியாது என்பதால், விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எஸ்.எம்.எஸ் (SMS) பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும்.

கட்டண விவரங்கள்:

அ) பதிவுக் கட்டணம்

நிரந்தரப் பதிவுக் கட்டணம் (One Time Registration) ரூ.150?-

குறிப்பு: 

நிரந்தரப் பதிவில் பதிவு செய்த நாளிலிருந்து ஐந்தாண்டுகள் முடிவுறாத விண்ணப்பதாரர்கள், இத்தேர்வுக்கான நிரந்தரப் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர். 

ஆ) முதனிலைத் தேர்வு

முதனிலைத் தேர்வுக்கு, கட்டண சலுகை பெற தகுதியுடையவர்கள்

தவிர ஏனையோர், இணையவழி மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது 

கட்டாயமாக தேர்வுக்கட்டணம் ரூ.100/- செலுத்த வேண்டும். 

இ) முதன்மை எழுத்துத் தேர்வு

கட்டண விலக்கு கோரப்படாத விண்ணப்பதாரர்கள் இந்த நியமனத்திற்கான 

முதனிலைத் தேர்வுக்கு கட்டணமாக ரூ.100/- செலுத்தியது போல் முதனிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், முதன்மை எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும். 

கட்டண சலுகை:-

வகை சலுகை
(i) ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர்
(அருந்ததியர்)
கட்டணம் செலுத்தத் தேவையில்லை
(ii) பழங்குடியினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை
(iii) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/
சீர்மரபினர்
மூன்று முறை மற்றும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை
(iv) இஸ்லாமியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட
இஸ்லாமிய வகுப்பினர்
மூன்று முறை மற்றும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை
(v) முன்னாள் இராணுவத்தினர் இரண்டு முறை மற்றும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை
(vi) நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் (40 சதவீதத்திற்கு குறைவில்லாதவர்கள்) கட்டணம் செலுத்தத் தேவையில்லை
(vii) ஆதரவற்ற விதவைகள் (ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் வருவாய் கோட்ட அலுவலர்/ மாவட்ட சார் ஆட்சியர் /
மாவட்ட உதவி ஆட்சியர் இவர்களிடம் பெற்றிருக்க வேண்டும்)
கட்டணம் செலுத்தத் தேவையில்லை

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: 

  • விண்ணப்பதாரர்கள் முதலில் TNPSC-யின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தைத் திறக்க “ஆன்லைனில் விண்ணப்பிக்க” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவி அல்லது சேவையின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்களிடம் ஏற்கனவே தனித்துவ ஐடி இருந்தால், உள் நுழைந்து தகவல்களைப் பார்க்கவும், தேவைப்பட்டால் அவற்றைப் புதுப்பிக்கவும், உங்களின் தனித்துவ ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • உங்களிடம் சரியான ஐடி இல்லையென்றால், எந்தப் புலத்தையும் தவிர்க்காமல் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்.
  • புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வதற்கான வழிகாட்டுதல்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரக்குறிப்புகளின்படி விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்ற வேண்டும். புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம் இல்லாமல் ஆன்லைன் விண்ணப்பம் முழுமையடையாது.

குறிப்பு: 

(i) விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான கடைசி தேதி வரை தங்களது இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

(ii) விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் கவனக் குறைவு காரணமாக தவறுகள், பிழைகள் மற்றும் தவறான தகவல்கள் அளித்திருந்தால் விண்ணப்பம் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம் முடிந்த பிறகு எந்த ஒரு தகவலையும் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இது தொடர்பான எந்த ஒரு கோரிக்கைகளும் கவனிக்கப்படமாட்டாது. 

தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:

  • முதல்நிலைத் தேர்வுக் கட்டணம் ரூ.100/- ஐ (ரூபாய் நூறு மட்டும்) இணையவழியில் (இணைய வங்கி, பற்று அட்டை, கடன் அட்டை) விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளிற்குள் செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் வங்கிகளின் சேவைக் கட்டணமும் சேர்த்து செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களின் கட்டண சலுக்கைக்கான தகுதியின் அடிப்படையில் தான் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெற முடியும்.
  • இணைய வழியில் தேர்வுக் கட்டணம் செலுத்தாமல், நேரடியாக செலுத்தும் வரைவு காசோலை /  அஞ்சலக ஆணை போன்றவை ஏதேனும் பெறப்பட்டிருப்பின் அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் மற்றும் இத்தகைய கட்டணங்கள் திருப்பி செலுத்தப்படமாட்டாது.
  • இணைய வழிக் கட்டணம் செலுத்தும் முறையில் பணப்பரிமாற்றம்

தோல்வியடைந்தாலோ அல்லது வங்கிகளால் ஒத்திசைவு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டாலோ அதற்கு தேர்வாணையம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது.

TNPSC குரூப் தேர்விற்கு தயாராவதற்கு தேவையான 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடத்திட்டங்களும் Embibe தளம் மற்றும் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளன.

EMBIBE WEBSITE:  https://www.embibe.com/ 

EMBIBE APP Play Store Download Link இலவசமாக அணுகி உங்கள் கற்றலை மேம்படுத்தி தேர்வில் வெற்றி பெற்றிடுங்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்- Group I தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறைப் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தினை பார்வையிடவும். 

Embibe-யில் 3D கற்றல், புத்தகப் பயிற்சி, டெஸ்ட்கள் மற்றும் சந்தேகத் தீர்ப்பான்கள் மூலம் உங்கள் சிறந்ததை அடையுங்கள்