
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்- Group I தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை-2022
August 16, 2022TNPSC குரூப் 1 தேர்விற்கான தகுதி வரம்புகள்:
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி-I) பணிகள் அடங்கிய
பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமானம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 22.08.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் |
தேர்வின் பெயர் | TNPSC |
வலைத்தளம் | www.tnpsc.gov.in |
நிறுவப்பட்டது | 1929 |
தலைமையகம் | சென்னை |
நோக்கம் | தமிழ்நாடு அரசுப் பணிக்கு தேர்வு செய்தல் |
வேலைவாய்ப்பு பகுதி | தமிழ்நாடு |
முகவரி | தமிழ்நாடு பப்ளிக் சர்விஸ் கமிஷன் TNPSC சாலை, V.O.C.Nagar, பார்க் டவுன், சென்னை-600003, தமிழ்நாடு. |
விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படட விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலங்களுக்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தை செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு முறை பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம்/ தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கான நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு முறைப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
அறிவிப்பு நாள் | 21.07.2022 |
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி நாள் |
22.08.2022 |
இணையவழி விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம் | 27.08.2022 – 12.01 மு.ப. முதல் |
29.08.2022 – 11.59 பி.ப. வரை | |
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் | 30.10.2022 முற்பகல் 9.30 மணி முதல் |
பிற்பகல் 12.30 மணி வரை | |
முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் | முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும். |
வ.எண் |
பதவியின் பெயர் |
குறைந்தபட்ச வயது வரம்பு (01.07.2022 அன்று நிறைவடைந்திருக்க வேண்டும்) |
அதிகபட்ச வயது வரம்பு 01.07.2022 அன்று நிறைவடைந்திருக்கக் கூடாது. | |
---|---|---|---|---|
ஆ.தி., ஆ.தி(அ),ப.ப., மி.பி.வ., / சீ.ம., பி.வ(இஅ), பி.வ.(இ) மற்றும் அனைத்து வகுப்பினைச் சார்ந்த ஆதரவற்ற விதவை. |
“ஏனையோர்” (அதாவது ஆ.தி., ஆ.தி(அ),ப.ப., மி.பி.வ., / சீ.ம., பி.வ(இஅ) மற்றும் பி.வ.(இ) ஆகிய வகுப்பினைச் சாராதவர்கள்) |
|||
1. | அனைத்து பதவிகளுக்கும் (உதவி ஆணையர் வணிக வரித்துறை தவிர) | 21 வயது | 39* வயது | 34* வயது |
2. | உதவி ஆணையர் வணிக வரித்துறை | |||
(i) | ஏதேனும் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் | 21 வயது | 39* வயது | 34* வயது |
3. | பல்கலைக்கழக மானியக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக நிறுவனத்திடமிருந்து B.L பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் | 21 வயது | 40* வயது | 35* வயது |
விண்ணப்பதாரர்கள் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியினை பெற்றிருக்க வேண்டும். [முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அவர்கள் விண்ணப்பத்தில், கோரும் முன்னுரிமை கல்வித்தகுதி உள்ளிட்ட கல்வித் தகுதிகளுக்கான உரிய சான்றுகளை தேர்வாணையத்தால் கோரப்படும் நேரத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குறிப்பு :
(i) தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016, பிரிவு 25-ல் குறிப்பிட்டுள்ளவாறு இத்தெரிவிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியினை முறையே 10-ஆம் வகுப்பு + 12-ஆம் வகுப்பு / பட்டயப்படிப்பு அல்லது இணைக்கல்வித் தகுதி + இளங்கலையில் பட்டம் என்ற வரிசையில் பெற்றிருக்க வேண்டும்.
(ii) இறுதியாண்டு பட்டப்படிப்பு தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி-I) பணிக்கு விண்ணப்பிக்கலாம் அவர்கள் முதன்மை தேர்வுக்கு தெரிவு செய்யப்படும்போது பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு முதன்மை தேர்விற்கான அறிவிக்கை வெளியான பின்னர்(இந்த நடவடிக்கைக்கான கடைசி தேதி பின்னர்அறிவிக்கப்படும்) இதற்கான ஆதாரச்சான்றினை சமர்ப்பிக்கத் தவறினால், அவர்கள் முதன்மை தேர்வினை எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
(iii) இறுதியாண்டு மருத்துவப் படிப்பு (M.B.B.S) அல்லது வேறு ஏதேனும் மருத்துவத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், உள்ளிருப்பு பயிற்சி (Internship) முடிக்காதவர்களும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி-I)-இல் உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதன்மை எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்படும் போது, தேவையான இறுதி தொழில்முறை மருத்துவ தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக பல்கலைக்கழகம் / நிறுவனத்தால் வழங்கப்பட்ட தகுதி வாய்ந்த அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட மூலச்சான்றின் நகலை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு முதனிலைத் தேர்வுக்குஅனுமதிக்கப்படுவர். இது போன்ற சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரர்கள் வாய்மொழித் தேர்வுக்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
(iv) நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதிக்கு இணையான கல்வித் தகுதியினை கோரும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கல்வித் தகுதிக்கு இணையானது என்பதற்கான சான்றை அரசாணையாக இவ்வறிவிக்கை தேதியன்று அல்லது அதற்கு முன்னர் பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறு பெற்றிருக்கவில்லையெனில் விண்ணப்பதாரரின் விண்ணப்பம் உரிய வழிமுறைகளை பின்பற்றி நிராகரிக்கப்படும். அறிவிக்கையின் தேதிக்கு பின்னர் இணையான கல்வித் தகுதி என வழங்கப்பட்ட அரசாணை ஏதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
TNPSC குரூப் தேர்விற்கு தயாராவதற்கு தேவையான 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடத்திட்டங்களும் Embibe தளம் மற்றும் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளன.
EMBIBE WEBSITE: https://www.embibe.com/
EMBIBE APP Play Store Download Link இலவசமாக அணுகி உங்கள் கற்றலை மேம்படுத்தி தேர்வில் வெற்றி பெற்றிடுங்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்- Group I தேர்விற்கான தகுதி வரம்புகள் பற்றிய மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/ என்ற அரசு அதிகாரபூர்வ இணையதளத்தினை பார்வையிடவும்.