Saas மூலம் AI அன்லாக்கிங்
விதிமுறைகள் & நிபந்தனைகள்
பயனருக்கான தகவல்
Indiavidual Learning Limited-க்கு (”Embibe” அல்லது “நாங்கள்”) உங்களை வரவேற்கிறோம். இது இந்திய நிறுவனச்சட்டம் 1956-ன் கீழ் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது இதன் வலைத்தளமான https://www.embibe.com/in-ta மூலமாகவும், அதன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (API’s), மொபைல் App-கள் மற்றும் இணைய சேவை மூலமாகவும் இயங்கிவருகிறது. (பெரும்பாலும், ‘இணையதளம்’(website).
இந்த சேவை விதிமுறைகள் என்பது நீங்கள் இந்த இணையதளத்தை உபயோகிப்பதற்கு உங்களுக்கும்(“நீங்கள்”) Embibe-ற்கும் இடையேயான சட்டபூர்வ ஒப்பந்தமாகும்.
குறிப்பு: இந்த இணையதளத்தை பயன்படுத்துவோர்களை மற்றும் பார்ப்பவர்களை, பயனர் என்றும் பயனாளர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தயவுசெய்து இந்த சேவை விதிமுறைகளை கவனமாக படிக்கவும். இந்த தளத்தில், பதிவு செய்வதன் மூலம், அணுகுவதன் மூலம் அல்லது பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இந்த சேவை விதிமுறைகளை படித்து, புரிந்து கொண்டு அதற்கு ஒப்புக்கொண்டதாக உறுதி அளிக்கிறீர்கள். இதில் Embibe-இன் தனியுரிமை நோட்டீஸும் உள்ளடங்கும். https://www.embibe.com/in-ta/privacy-policy , மூன்றாம் தரப்பினரின் உள்ளடக்க கொள்கை (பொருத்தமான URL கொண்டது மற்றும் வலைத்தள பயன்பாட்டில் உள்ளது) மற்றும் மேற்கொண்ட வழிகாட்டுதல்கள்(கீழே கொடுக்கப்பட்டுள்ளது) (பொதுவாக, “விதிமுறைகள்” அல்லது “சேவை விதிமுறைகள்”).
1.அறிமுகம்
இந்த விதிமுறைகள் மற்றும் பயன்பாட்டு நிபந்தனைகள்(“பயன்பாட்டு விதிமுறைகள்”/ “விதிமுறைகள்”) என்பது நிறுவனச்சட்டம் 1956-யின் கீழ் நிறுவப்பட்ட Indiavidual Learning Limited (”Embibe” அல்லது “நாங்கள்”) என்னும் நிறுவனத்திற்கும், Embibe வலைத்தளம் அல்லது அது சார்ந்த பயனருக்கும் (“நீங்கள்”) இடையேயானது. “அது சார்ந்த” என்று இங்கு குறிப்பிடும் போது, https://www.embibe.com/in-ta/ மற்றும் அதன் தொடர்புடைய பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (API’s), மொபைல் App-கள், Embibe சேவைகள் (கீழே வரையறுக்கப்பட்டபடி) மற்றும் Embibe தற்போது அல்லது எதிர்காலத்தில் (ஒன்றிணைந்து “தளம்”) வழங்கக்கூடிய வேறு எந்த தயாரிப்பு மற்றும் சேவைகள் அனைத்தும் அதில் அடங்கும். இந்த பயன்பாட்டு விதிமுறைகள், உங்களுடைய கணினிகள், லேப்டாப்கள், கைபேசி போன்ற வேறு எந்த சாதனங்களில் நீங்கள் எங்கள் தளத்தை பயன்படுத்தினாலும் அதன் மூலம் உங்கள் பயன்பாட்டை நிர்வகிக்கிறது.
Embibe என்பது கற்றலை மேம்படுத்த உதவும் ஒரு Edtech தளமாகும். இந்த தளத்தில் பதிவு செய்வதன் மூலம் அல்லது இந்த தளத்தை உபயோகிப்பதன் மூலம், நீங்கள் Embibe-இன் தனியுரிமைக் கொள்கை மற்றும் பயன்பாட்டு விதிமுறைகளை படித்து, புரிந்துகொண்டீர்கள் என்றும் (https://www.embibe.com/in-ta/privacy-policy/) இந்த வரையறைக்கு உடன்படுகிறீர்கள் என்றும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
இந்த பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைக்கு நீங்கள் உடன்படவில்லை என்றால், தயவுசெய்து இந்த தளத்தை பயன்படுத்த வேண்டாம் அல்லது சேவைகளைப் பெற வேண்டாம். இந்த விதிமுறைகள் தகவல் தொழில்நுட்ப சட்டம் (2000) (திருத்தப்பட்ட / மீண்டும் இயற்றப்பட்டது) (“IT Act”) மற்றும் அதன் கீழ் உள்ள விதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் விதி 3 (1) (இடைத்தரகர்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) மற்றும் விதிகள், 2021 போன்ற விதிகளுக்கு இணங்க இணைய வழியில் வெளியிடப்படுகிறது. இந்த விதிகளின்படி, ஒரு App-ஐ உபயோகிக்க்கும் விதிகள் மற்றும் விதிமுறைகள், தனியுரிமைகொள்கைகள், பயன்பாட்டு விதிமுறைகள் போன்றவைகள் கண்டிப்பாக வெளியிடப்பட வேண்டும். இந்த பதிவு கணினியால் உருவாக்கப்பட்டது. இதற்கு நேரடியான கையொப்பம் அல்லது மின்னணு கையொப்பம் போன்றவைகள் தேவையில்லை.
2. Embibe தளத்தைப் பயன்படுத்துவதற்கான தகுதி
நீங்கள் சட்டப்பூர்வமாகத் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும் மற்றும் ஒப்பந்த உடன்படிக்கையில் நுழைவதற்கு குறைந்தபட்சம் உங்கள் நாட்டில் / வசிக்கும் மாநிலத்தில், நீங்கள் சட்டபூர்வ வயதை எட்டியிருக்க வேண்டும். நீங்கள் உங்கள் நாட்டில் / வசிக்கும் மாநிலத்தில் சட்டத்தின்படி இளவயதினராக இருந்தால், அதாவது இந்தியாவில் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தால் அல்லது உங்கள் நாட்டில் / வசிக்கும் மாநிலத்தில் இளவயதினராகக் கருதப்படுபவராக இருந்தால், நீங்கள் இந்த தளத்தைப் பயன்படுத்த மற்றும் பதிவுசெய்ய தகுதியற்றவர். நீங்கள் எங்கள் தளத்தைப் பயன்படுத்த விரும்பினால், அத்தகைய பயன்பாடு உங்கள் சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது பெற்றோரால் மட்டுமே கிடைக்கப் பெறும். பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் அவர்களது குழந்தை இந்த தளத்தை பயன்படுத்துவதற்கும் பயன்பாட்டு விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டாக வேண்டும். ஒரு இளவயதினர் எங்கள் தளத்தை பயன்படுத்தினால் அல்லது பதிவுசெய்தால், நாங்கள் அவர் சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றிருப்பதாக எடுத்துக்கொள்வோம், இத்தகைய பயன்பாடு சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது பெற்றோர்கள் மூலமாக மட்டுமே சாத்தியம். இளவயதினர் எங்கள் தளத்தில் பதிவு செய்வதாலோ அல்லது உபயோகிப்பதாலோ அல்லது சேவைகளை பெறுவதாலோ ஏற்படும் எந்த விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பாக மாட்டோம்.
நீங்கள் ஒரு பள்ளி/கல்வி நிறுவனம் அல்லது அது சார்ந்த பயனாளர்களாக இருந்தால், Embibe-உடன் தனி எழுத்துப்பூர்வ சேவை ஒப்பந்தம் செய்து கொண்டால் தவிர, நீங்கள் உங்கள் பள்ளி/கல்வி நிறுவனம் சார்பாக, பயனர் பயன்பாட்டு விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டவர் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் மூலமாக, உங்களது பள்ளி/கல்வி நிறுவனமும் இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறது.
நீங்கள் தளத்தை அணுகி பயன்படுத்தும் போது, நீங்கள் அனைத்து பொருந்தக்கூடிய சட்டங்களுக்கும் இணங்க செயல்படுவீர்கள் என்று உத்தரவாதம் அளிக்கிறீர்கள். நீங்கள் இந்த பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்க, மேலும், Embibe மற்றும் மூன்றாம் தரப்பினர்களின் சட்ட உரிமைகளை விதிமீறாத வகையில் இந்த தளத்தைப் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.
3. மாற்றங்கள்
3.1 “விதிமுறைகளின் மாற்றங்கள்”: நாங்கள் புதிய நடைமுறைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த பயன்பாட்டு விதிமுறைகளை அவ்வப்போது புதுப்பிக்கலாம் அல்லது தளத்தின் பயன்பாட்டை பாதிக்கும் தொழில்நுட்பங்களையும் புதுப்பிக்கலாம்.கடைசித் திருத்தத்தின் தேதி அல்லது புதுப்பித்தலின் தேதி தலைப்பின் கீழ் தோன்றும். தயவுசெய்து இந்த பயன்பாட்டு விதிமுறைகளை கவனமாக படிக்கவும். Embibe-இனால் வழங்கப்படும் சேவைகள் தொடர்புடை கட்டணங்கள் உட்பட அனைத்து விதிமுறைகளையும் மாற்றும் உரிமை Embibe-க்கு உள்ளது. வணிகம் மற்றும் சட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேலும் ஒழுங்குமுறைக்கு தேவையான விஷயங்களின் அடிப்படையில் விதிமுறைகள் மேலும் மாற்றப்பட்டு இணையத்தில் புதுப்பிக்கப்படலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். இந்த விதிமுறைகளையும் அதன் மாற்றங்களையும் தெரிந்துகொள்ள அவ்வப்போது இந்த பக்கத்தை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள்.
3.2 “Embibe சேவைகளை மாற்றியமைத்தல்”: எந்த நேரத்திலும், Embibe சேவைகளில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களையும் கூறுகளையும் Embibe-இன் சொந்த விருப்பத்தின் பேரில் புதியன சேர்க்க, மாற்றியமைக்க அல்லது நீக்குவதற்கான உரிமை Embibe-க்கு உள்ளது.
4. வரையறைகள்
4.1 “பொருந்தக்கூடிய சட்டம்” என்பது பொருந்தக்கூடிய அனைத்து இந்தியச் சட்டங்கள், துணைச் சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகள், நெறிமுறைகள், விதிகள், வழிகாட்டுதல்கள், கொள்கைகள், அறிவிப்புகள், வழிமுறைகள், தீர்ப்புகள், ஆணைகள் அல்லது இந்திய அதிகாரத்தின் கீழ் செயல்படும் எந்தவொரு அரசாங்க அதிகாரி அல்லது நபரின் அதிகாரப்பூர்வ உத்தரவாகும்.
4.2 “உள்ளடக்கம்” என்பது ( இவை மட்டும் அல்ல) அனைத்து தரவு, படங்கள், வீடியோக்கள், இருப்பிடத் தகவல், தளத்தின் மூலம் கிடைக்கும் தரவுகள் மற்றும் இலவச உள்ளடக்கத்தை உள்ளடக்கிய எந்த வகையான தகவலையும் உள்ளடக்கும் ;
4.3 “அறிவுசார் சொத்துரிமைகள் சட்டம்” என்பது இந்திய சட்டங்களின் கீழ் வரும் அனைத்து வகையான அறிவுசார் சொத்துரிமைகளிலும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத உரிமைகளைக் குறிக்கும். மேலும், பிற அதிகார வரம்புகளின் சட்டங்களின் கீழ் வரும் அனைத்து ஒப்புமை உரிமைகளையும் குறிக்கும். அதுபோக, காப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள், பதிப்புரிமைகள், வடிவமைப்புகள் அல்லது ஒரு கண்டுபிடிப்பு போன்ற பதிவு செய்யக்கூடிய மனித புத்தியின் சட்டபூர்வமாக பாதுகாக்கக்கூடிய தயாரிப்பு அல்லது செயல்முறையை உள்ளடக்கும். மேலும், புதிய தயாரிப்பு, இலக்கிய உருவாக்கம், உணர்ச்சி வெளிப்பாடுகள், தனித்துவமான பெயர், வர்த்தக இரகசியம், வணிக முறை, தரவுத்தளம், தொழில்துறை செயல்முறை, கணினி நிரல், மூல குறியீடு, செயல்முறை அல்லது வழங்கல், காட்சி இடைமுகங்கள், கிராபிக்ஸ், வடிவமைப்பு, தொகுப்பு, தகவல் உள்ளடக்கம், கல்வி வீடியோக்கள் மற்றும் பயிற்சிகள் போன்ற அனைத்தும் உள்ளடங்கும்.
4.4 “Embibe தரவு” என்பது, தளத்தை பயன்படுத்துவதற்காக, பயனர் தனது சொந்த விருப்பத்தின் பேரில், தளத்திற்கு வழங்கிய பயனருடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் குறிக்கும்;
4.5 “Embibe சேவைகள்” என்பது Embibe வழங்கும் சேவைகளைக் குறிக்கும்:
அதன் இணையதளம் மூலம்: https://www.embibe.com/in-ta; தனிநபர்களுக்கு, Rank up(https://seed.embibe.com/rankup), Jump(https://seed.embibe.com/jump), Study (https://seed.embibe.com/study)
போன்றவைகளும், ஆசிரியர் மற்றும் பிற நிறுவனங்களுக்கு Embibe-யின் தயாரிப்பான (https://seed.embibe.com/institute);
வழங்கப்படுகிறது. இரு விற்பனையாளர்கள் இடையில் நடைபெறும் நமது சேவை பரிவர்த்தனைக்கு Embibe-இன் API-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
மற்றும் எதிர்காலத்தில் அதன் பயனர்களுக்கு Embibe வழங்கக்கூடிய வேறு அனைத்து சேவையும் இதில் அடங்கும்.
4.6 “இலவச உள்ளடக்கம்” என்பது தளத்தில் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் எந்த உள்ளடக்கத்தையும் குறிக்கிறது.
4.7 “பயனர் உள்ளடக்கம்” என்பது பதிவேற்றம், மதிப்பீடுகள், மதிப்புரைகள், படங்கள், புகைப்படங்கள், செய்திகள், சுயவிவரத் தகவல் போன்ற தளத்தின் மூலமாக கிடைக்கும் அல்லது நீங்கள் பதிவேற்றும், பகிரும் அல்லது அனுப்பும் உள்ளடக்கத்தைக் குறிக்கும். இந்த விவரங்கள் உங்கள் கணக்கில் காட்டப்படும். மற்றும்,
4.8 “பயனர்/பயனர்கள்” என்பது ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் அல்லது தளத்தைப் பயன்படுத்தும் அல்லது பார்வையிடும் எந்தவொரு நபரையும் குறிக்கும்.
5. பயனர் கணக்கு, பாஸ்வோர்ட் மற்றும் பாதுகாப்பு
நீங்கள் எங்கள் தளத்தை அணுக விரும்பினால், ஒரு பயனர் கணக்கை உருவாக்கும்படி கேட்கப்படுவீர்கள். தளத்தின் மூலம் கணக்கை உருவாக்க, நீங்கள் ஒரு பயனர்பெயர் மற்றும் பாஸ்வோர்டை தேர்ந்தெடுத்து, சில தகவல்களை எங்களுக்கு வழங்க வேண்டும். இந்தத் தகவல் எங்களின் தனியுரிமைக் கொள்கையின்படி சேகரிக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு பின் செயலாக்கப்படும் [தனியுரிமைக் கொள்கைக்கான இணைப்பைச் சேர்க்கவும்] (https://www.embibe.com/in-ta/privacy-policy/)
Embibe அனுமதித்தால், உங்களிடம் ஏற்கனவே உள்ள பேஸ்புக், கூகுள் அல்லது வேறு ஏதேனும் Embibe-உடன் ஒருங்கிணைக்கப்பட்ட பயனர் கணக்கு மற்றும் அவற்றின் உள்நுழைவுச் தகவல்களை பயன்படுத்தி உங்கள் கணக்கை பதிவு செய்யலாம்.
பயனர் கணக்கை அமைக்கும் போது துல்லியமான, சரியான மற்றும் முழுமையான தகவலை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் நுழைவுச்சொற்களின் பாதுகாப்பு மற்றும் உங்கள் கணக்கின் எந்தவொரு பயன்பாட்டிற்கும் நீங்களே பொறுப்பு. உங்கள் நுழைவுச்சொல் அல்லது உங்கள் கணக்கின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு குறித்து உங்களுக்குத் தெரிந்தால், ([email protected])
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் உடனடியாக Embibe-க்கு தெரிவிக்க ஒப்புக்கொள்கிறீர்கள்.
ஒரு பயனர் பெயரில் ஒரே ஒரு கணக்கை உருவாக்கி பயன்படுத்த நீங்கள் தகுதியுடையவர் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களைத் தவிர வேறு எந்த நிறுவனத்தின் சார்பாகவும் பதிவு செய்யவோ அல்லது கணக்கை உருவாக்கவோ உங்களுக்கு அனுமதி இல்லை.
தவறான அடையாளத்துடன் கணக்கைப் பதிவுசெய்து பயன்படுத்த மாட்டேன் என்றும் பயனரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி மற்றொரு பயனரின் கணக்கைப் பயன்படுத்த மாட்டேன் என்றும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
ஒவ்வொரு முறையும் தளத்தை உபயோகித்து முடித்தபின் கணக்கிலிருந்து வெளியேறுவதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
உங்கள் கணக்கு மற்றும் பாஸ்வோர்டின் பாதுகாப்பு மற்றும் உங்கள் கணக்கில் நிகழும் அனைத்து செயல்களுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு.
([email protected]) -க்கு கோரிக்கையைச் சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் கணக்கை எப்போது வேண்டுமானாலும் நீக்கிக்கொள்ளலாம். உங்கள் கணக்கை நீக்குவதற்கு உங்களிடமிருந்து Embibe-க்கு கூடுதல் தகவல் தேவைப்படலாம்.
6.பயனர் உள்ளடக்கம்
தளத்தை உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறீர்கள். மேலும், Embibe வெளிப்படையாக அனுமதிக்கும் வரை எந்த வணிக பயன்பாட்டிற்கும் இதை பயன்படுத்த கூடாது. கணக்கு பதிவுக்காக நீங்கள் Embibe-ற்கு வழங்கிய தகவல் தவிர, தளத்தில் பயனர் உள்ளடக்கத்தை உள்ளிடுவதன் மூலம், சமர்ப்பிப்பதன் மூலம் அல்லது அனுப்புவதன் மூலம், நீங்கள் Embibe-க்கு உலகளாவிய, பிரத்தியேகமற்ற, முழுமையாக பணம் செலுத்தி மாற்றக்கூடிய, நகலெடுக்க உரிமமுள்ள, வெளிப்படையாக காட்சிப்படுத்த, சீர்திருத்த, மொழிபெயர்க்க, மற்றும் பயனர் உள்ளடக்கத்தை விநியோகிக்க, இப்போது அறியப்பட்ட அல்லது இனிமேல் கண்டுபிடிக்கப்படும் எந்த ஊடகத்திலும் எந்த நோக்கத்திற்காகவும் உபயோகிக்க அனுமதிக்கிறீர்கள்.
எங்கள் தளத்தைப் பயன்படுத்தி பயனர் உள்ளடக்கத்தை உள்ளிடுவதன் மூலம், சமர்ப்பிப்பதன் மூலம் அல்லது அனுப்புவதன் மூலம், அந்தத் தகவலை நம்மிடம் சேமித்து வைப்பதற்கும், அத்தகைய பயனர் உள்ளடக்கத்தை இடுகையிடுவதற்கும், பராமரிப்பதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்குமான உரிமையை Embibe-க்கு வழங்குகிறீர்கள். அத்தகைய பயனர் உள்ளடக்கத்தை தளத்தில் சமர்ப்பிப்பதை நீங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதையும், பயனர் உள்ளடக்கம் மற்றவர்களின் உரிமைகளை மீறாமல் இருப்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள். Embibe-க்கு பயனர் வழங்கிய பயனர் உள்ளடக்கத்தின் விளைவாக ஏற்படும் அனைத்து உரிமைகோரல்களுக்கும் உங்களுக்கு பாதிப்பில்லாத வகையில் Embibe-ஐ பாதுகாப்பீர்கள் என்பதை இதன்மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள்.
Embibe-க்கு பயனர் வழங்கிய எந்தவொரு பயனர் உள்ளடக்கத்தையும் நிராகரிக்க, அகற்ற, திருத்த மற்றும் நகர்த்த அல்லது தடுக்கும் உரிமை Embibe-க்கு உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். இருப்பினும், பயனர் உள்ளடக்கத்தின் துல்லியம் மற்றும் சரியான தன்மையைக் குறிப்பிட வேண்டிய கடமை உங்களிடம் உள்ளது.
தளத்தில் பயனரால் சமர்ப்பிக்கப்பட்ட, அனுப்பப்பட்ட அல்லது இடுகையிடப்பட்ட எந்தவொரு பொருளின் உள்ளடக்கத்திற்கும் Embibe அல்லது எந்த மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
Embibe சேவைகள், விதிமுறைகள் மற்றும் Embibe-இன் உள்ளடக்க வழிகாட்டுதல்கள், தனியுரிமைக் கொள்கை அல்லது நிறுவனத்தின் பிற கொள்கைகளுக்கு முரணான எந்தவொரு உள்ளடக்கத்தையும், அவ்வப்போது புதுப்பிக்கப்படும் அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் முரணான உள்ளடக்கத்தை நீங்கள் பதிவேற்ற மாட்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். அத்தகைய உள்ளடக்கம் Embibe சேவைகளிலும் உங்கள் கணக்கிலும் எந்த விதத்திலும் எந்த காரணத்திற்காகவும் பதிவேற்றப்பட்டால், அத்தகைய உள்ளடக்கம் Embibe சேவைகள் மற்றும் உங்கள் கணக்கிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
7. தளத்தில் இடுகையிடப்பட்ட உள்ளடக்கம்
மூன்றாம் தரப்பினர் வைத்திருக்கும் பதிப்புரிமை அல்லது பிற அறிவுசார் சொத்துரிமைகளுக்கு உட்பட்டு, “Embibe உள்ளடக்கம்” என்று தோன்றும் அனைத்து உள்ளடக்கங்களும் Embibe-யிற்குச் சொந்தமானவை அல்லது உரிமம் பெற்றவை என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தளத்தை அணுகுவது அல்லது பயன்படுத்துவதனால் Embibe-யின் எந்த அறிவுசார் சொத்துரிமைக்கும் உங்களுக்கு உரிமை வழங்காது.
தளத்தில் இருக்கும் அனைத்து உள்ளடக்கங்களும் கல்வி நோக்கங்களுக்காகவும், Embibe-ஆல் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்ட பிற நோக்கங்களுக்காகவும் மட்டுமே உங்களுக்கு தரப்பட்டுள்ளது.
தளத்தில் வழங்கப்படும் உள்ளடக்கத்தின் எந்த பகுதியையும் பதிவிறக்க, நகலெடுக்க, புகைப்படம் எடுக்க அல்லது பரப்ப உங்களுக்கு அனுமதி இல்லை.
8. இலவச உள்ளடக்கம்
தளத்தில் பதிவு செய்தவுடன் பயனருக்கு சில இலவச உள்ளடக்கங்கள் வழங்கப்படலாம். அத்தகைய இலவச உள்ளடக்கம் Embibe-இன் விருப்பப்படி வழங்கப்படுகிறது. இந்த இலவச உள்ளடக்கங்கள் பயனருக்கு அறிவித்த பிறகு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கட்டணச் சந்தாவாக மாற்றப்படலாம்.
9. EMBIBE உரிமம் வழங்குதல்
இந்த பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தளத்தை அணுகுவதற்கான தனிப்பட்ட, வரையறுக்கப்பட்ட, பிரத்தியேகமற்ற, மாற்ற முடியாத, துணை உரிமம் பெறாத, திரும்பப்பெறக்கூடிய உரிமத்தை Embibe வழங்குகிறது. பயன்பாட்டு விதிமுறைகளின்படி வரையறுக்கப்பட்ட பயன்பாட்டு அனுமதி மட்டுமே உங்களுக்கு வழங்கப்படுகிறது. இதை தவிர தளத்திற்கான வேறு எந்த உரிமையையும் உங்களுக்கு தரப்படவில்லை.
தளத்தைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனையாக, தளம் அல்லது Embibe சேவைகளில் இடையூறு ஏற்படுத்தக்கூடிய எந்த வித கருவிகளையும் உபயோக படுத்த மாட்டேன் என்றும் (மென்பொருள் அல்லது வன்பொருள்) அது போன்ற எந்த ஒரு செயலையும் செய்யமாட்டேன் என்றும் நீங்கள் இதன்மூலம் உத்தரவாதம் அளிக்கிறீர்கள்.
10. தடைகள்
தளத்தில் உங்களின் பயன்பாடு பின்வரும் பிணைப்புக் கொள்கைகளால் கண்டிப்பாக நிர்வகிக்கப்படும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள், ஏற்றுக்கொள்கிறீர்கள் மற்றும் உறுதிப்படுத்துகிறீர்கள், மேலும், கீழ் கொடுக்கப்பட்டுள்ள எதையும் செய்ய மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறீர்கள்:
10.1 நம் தளத்தின் பாதுகாப்பு அம்சத்தை தோற்கடிப்பது, சேதப்படுத்துவது, இடையூறு ஏற்படுத்துவது அல்லது அவ்வாறு செய்ய முயற்சிப்பது.
10.2 ஏமாற்றுதல், ஏமாற்றும் முறைகளைப் பயன்படுத்துதல், விதிகளை மீறுவது, மென்பொருள் செயல்பாட்டை மீறுவது அல்லது அவ்வாறு செய்ய முயற்சிப்பது.
10.3 உங்களது பயனர் விவரத்தை தவிர தளத்தில் இருக்கும் எங்களது உள்ளடக்கங்களை மாற்றியமைக்க அல்லது மாற்றம் செய்ய முயற்சிப்பது.
10.4 உங்களது பயனர் விவரத்தை தவிர, எங்கள் தளத்திற்கு சொந்தமான உள்ளடக்கங்களையும் கூறுகளையும் Embibe-இன் முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, வணிக நோக்கத்திற்காக மறு ஆக்கம் செய்வது, நகலெடுப்பது, விற்பது அல்லது உபயோகிப்பது.
10.5 தன்னியக்க அமைப்பு, மென்பொருள் அல்லது சாதனத்தைப் பயன்படுத்தி, தளத்திற்கோ அல்லது அதன் வழியாகவோ தகவல்தொடர்புகளை உருவாக்கவும் அனுப்பவும் பயன்படுத்தவும் அல்லது பயன்படுத்துதல் தொடர்பாக எந்தவொரு நபரையும் நீங்கள் எரிச்சலூட்டுவது அல்லது துன்புறுத்தவது.
10.6 தளத்தில் உள்ள தேடுபொறி மற்றும் தேடல் முகவர்கள் தவிர வேறு எந்த இயந்திரத்தையும், மென்பொருளையும், கருவியையும், முகவரையும் அல்லது பிற சாதனத்தை அல்லது பொறிமுறையை (வரம்பு இல்லாமல், உலாவிகள், சிலந்திகள், ரோபோக்கள், அவதார்கள் அல்லது அறிவார்ந்த முகவர்கள் உட்பட) பயன்படுத்துவது அல்லது பயன்படுத்த முயற்சிப்பது.
10.7 எந்தவொரு கணினி மென்பொருள் அல்லது வன்பொருள் அல்லது தொலைத்தொடர்பு உபகரணங்களின் செயல்பாட்டில் குறுக்கிட வடிவமைக்கப்பட்ட மென்பொருள் வைரஸ்கள் அல்லது வேறு எந்த கணினி குறியீட்டைக் கொண்ட எந்தவொரு சட்டவிரோத பொருள் அல்லது வேறு எந்த உள்ளடக்கத்தையும் தளத்தின் மூலம் பதிவேற்ற, இடுகையிட, அனுப்ப, பகிர அல்லது கிடைக்கச் செய்தல்.
10.8 ஆபாசமான, வெளிப்படையான பாலியல் உள்ளடக்கங்கள், வெறுக்கத்தக்க, அச்சுறுத்தும் செயல்களை செய்வது அல்லது Embibe மற்றும் எந்த மூன்றாம் தரப்பினரின் உரிமைகளை மீறும் எந்தவொரு தகவலையும் பதிவேற்றுதல், அனுப்புதல் அல்லது இடுகையிடுதல்.
10.9 மற்றொருவரின் தனியுரிமையை ஊடுருவும், ஆபாசமான, சிரார்ப்பால் சார்ந்த, உள்ளடக்கத்தை பதிவேற்றுவது, வெளியிடுவது, இடுகையிடுவது, அனுப்புவது அல்லது பகிருவது.
10.10 உடல் தனியுரிமை மற்றும் பாலின அடிப்படையில் அவமானப்படுத்துதல் அவதூறுப்படுத்துதல் அல்லது துன்புறுத்துதல்.
10.11 பண மோசடி செய்வது அல்லது இனரீதியாக ஆட்சேபனைக்குரிய விஷயங்களை செய்வது அல்லது ஊக்குவிப்பது.
10.12 சூதாட்டம் இல்லையெனில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு முரணாக செயல்களை செய்வது.
10.13 நீங்கள் உருவாக்காத அல்லது பயன்படுத்த உங்களுக்கு அனுமதி இல்லாத விஷயங்களை இடுகையிட அனுப்ப அல்லது பகிர எங்கள் தளத்தைப் பயன்படுத்துதல்.
10.14 தனிப்பட்ட, வணிகமல்லாத பயன்பாட்டிற்காக மட்டுமே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் எங்களது எழுத்துப்பூர்வ அனுமதியில்லாமல் இந்த தளத்தை எந்தவொரு வணிக பயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்தக்கூடாது .
10.15 எங்களது எழுத்துப்பூர்வ அனுமதியில்லாமல் எந்த ஒரு தனியுரிமை தகவலையும் வணிக பயன்பாட்டிற்கோ அல்லது வேறு எதற்காகவும் எந்த வகையிலும் நகலெடுப்பது அல்லது விநியோகிப்பது.
10.16 எங்களது தளத்தில் இருந்து பதிவிறக்கம் அல்லது அச்சிட்ட எந்த ஒரு தகவலையும் மாற்றுவது அல்லது திருத்துவது.
10.17 தளத்தின் பிற பயனர்களுக்கு கோரப்படாத சலுகைகள், விளம்பரங்கள் அல்லது தேவையற்ற மின்னஞ்சல் அனுப்புதல்.
10.18 சம்பந்தப்பட்ட சட்டத்தில் வெளிப்படையான அனுமதி இருந்தால் தவிர, எந்த வகையிலும் தளத்தின் மூல நிரலை அல்லது அதன் ஏதேனும் பகுதியைக் கண்டறிய முயற்சிப்பது.
10.19 தளத்தின் செயல்பாட்டில் குறுக்கிடுதல், சேதப்படுத்துதல் அல்லது வைரஸ்கள், விளம்பர மென்பொருள், உளவுமென்பொருள், வார்ம்கள் போன்ற தீங்கிழைக்கும் நிரல்களைப் பதிவேற்றுதல் அல்லது பரப்புதல்.
10.20 எந்த வகையிலும் பதிவேற்றவோ திருத்தவோ வெளியிடவோ அனுப்பவோ சேமிக்கவோ புதுப்பிக்கவோ அல்லது பகிரவோ கூடாதவைகள்: குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பவைகள்;
10.21 தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறுவது;
10.22 செய்தியின் தோற்றம் பற்றி முகவரிதாரரை ஏமாற்றுதல் அல்லது தவறாக வழிநடத்துதல். இல்லையெனில், வேண்டுமென்றே வெளிப்படையான தவறான விஷயங்களை உண்மையுடன் தொடர்புபடுத்தி ஏமாற்றுவது.
10.23 மற்றொரு நபரைப் போல் ஆள்மாறாட்டம் செய்தல்;
10.24 இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, காவல், பாதுகாப்பு, அல்லது இறையாண்மை, வெளி மாநிலங்களுடனான நட்புறவு, அல்லது பொது ஒழுங்கை அச்சுறுத்துவது, அல்லது ஏதேனும் குற்றங்களைச் செய்ய தூண்டுவது அல்லது குற்றங்களை விசாரிப்பதைத் தடுப்பது அல்லது பிற நாட்டை அவமதிப்பது;
10.25 பிறரை அல்லது பிற நிறுவனங்களை காயப்படுத்தும் நோக்கில் அல்லது பண ஆதாயங்களுக்காக முற்றிலும் தவறான மற்றும் உண்மையற்ற விஷயங்களை எந்த வகையிலாவது எழுதுவது அல்லது பரப்புவது.
11.பொறுப்பு மறுப்பு
11.1 EMBIBE மற்றும்/அல்லது அதன் தொடர்புடைய நிறுவனங்கள் எந்த காரணத்திற்காகவும் EMBIBE-இல் வழங்கப்படும் தகவல்கள், சேவைகள் அல்லது மென்பொருளின் நம்பகத்தன்மை, கிடைக்கும்தன்மை, காலக்கெடு மற்றும் துல்லியம் குறித்த எந்த ஒரு பிரதிநிதித்துவத்தையும் வழங்கவில்லை. அத்தகைய அனைத்து தகவல்கள், மென்பொருள் மற்றும் EMBIBE சேவைகள் எந்த வகையான உத்தரவாதமும் இல்லாமல் “உள்ளது போல்” வழங்கப்படுகின்றன. EMBIBE மற்றும்/அல்லது அதன் சப்ளையர்கள் இந்த தகவல், மென்பொருள் மற்றும் EMBIBE சேவைகள் தொடர்பான அனைத்து உத்தரவாதங்கள் மற்றும் நிபந்தனைகளை நிராகரிக்கின்றன, இதில் அனைத்து மறைமுக உத்தரவாதங்கள் மற்றும் வணிகத்தன்மையின் நிபந்தனைகள் போன்ற அனைத்தும் அடங்கும்.
11.2 இந்த தளம் வழியாக பகிரப்படும் தகவல்கள் பகிரப்படாத தகவல்கள், பெறப்பட்ட மற்றும் பெறப்படாத தகவல்கள் மாற்றம் செய்யப்பட்ட தரவுகள், அங்கீகரிக்கப்படாத உபயோகங்கள், மேலும் உள்ளிடப்பட்ட எந்தவொரு பரிவர்த்தனைகளுக்கும் EMBIBE பொறுப்பேற்காது என்பதை நீங்கள் குறிப்பாக ஒப்புக்கொள்கிறீர்கள்.
11.3 அறிவுசார் சொத்துரிமைகள் உட்பட, மற்றொருவரின் உரிமைகளை மீறுவதற்கு EMBIBE பொறுப்பேற்காது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எந்தவொரு மூன்றாம் தரப்பினராலும் பயன்பாட்டில் சேர்க்கப்படும் மற்றும்/அல்லது பயன்படுத்தப்படும் எந்த சேவைகளுக்கும் EMBIBE பொறுப்பல்ல என்பதையும் நீங்கள் குறிப்பாக ஒப்புக்கொள்கிறீர்கள்.
11.4 அனைத்து செயல்பாட்டு அமைப்புகள், ஸ்மார்ட் போன்கள், நெட்வொர்க்குகள், அவற்றின் அனைத்து பதிப்புகளுக்கும் இது பொருந்தக்கூடியது என்று Embibe உத்தரவாதம் அளிக்கவில்லை.
11.5 உங்கள் தொலைபேசி அல்லது சாதனத்தில் தளத்தின் செயல்பாட்டிற்கான தேவைகளாகிய போதுமான பேட்டரி பேக் அப், இணைய நெட்வொர்க் வலிமை போன்றவை உங்களின் பொறுப்பு.
11.6 எந்த சூழலிலும், EMBIBE மற்றும்/அல்லது அதன் துணை நிறுவனங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது தெரிந்தோ தெரியாமலோ Embibe சேவைகள், மென்பொருள் அல்லது தகவல்களால் ஏற்படும் சேதத்திற்கு வரைமுறையின்றி எந்த சேதமாக இருந்தாலும் அதற்கு பொறுப்பேற்க்காது. Embibe சேவைகள், மென்பொருள் மற்றும் தகவல்கள் வழங்க தவறுவது போன்றவைகளும் இதில் அடங்கும். மேலும், அலட்சியம், ஒப்பந்தம், கடுமையான பொறுப்பு போன்ற எந்த காரணத்தால் இந்த சேதம் ஏற்பட்டாலும் அதற்க்கு Embibe அல்லது அதன் துணை நிறுவனங்கள் பொறுப்பேற்காது. ஏற்கனவே தெரிந்த முன்னெச்சரிக்கை செய்யப்பட்ட சேதங்களும் இதில் அடங்கும்.
11.7 தளத்தில் கிடைக்கும் தகவல்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே. இது உங்கள் கல்வி பாடத்திட்டத்திற்கு மாற்றாக இல்லை என்பதை நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள் மற்றும் புரிந்துகொள்கிறீர்கள். EMBIBE மற்றும் அதன் துணை நிறுவனங்கள், இயக்குநர்கள், முகவர்கள் மற்றும் ஊழியர்கள், மற்றும் தளத்துடன் தொடர்புடைய மூன்றாம் தரப்பினர்கள் யாரும் உங்களது நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள் அல்லது நீங்கள் எடுக்கும் வேறு எந்த தேர்வுக்கும் எந்த வகையான உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. விரைவான டெஸ்ட்கள், கேள்விகள், தயாரிப்புகள், கற்றல் பிரிவுகள் மற்றும் தளத்தில் வழங்கப்பட்ட வேறு எல்லா தகவலும் அதன் பயனர்களுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்த தகவல்களில் இருக்கும் பிழைகள், அறிக்கைகள் அல்லது விடுபட்டுப்போன தகவல்களுக்கு EMBIBE மற்றும் அதன் துணை நிறுவனங்கள், இயக்குனர்கள், முகவர்கள் மற்றும் ஊழியர்கள் பொறுப்பல்ல.
12. ஆதரவாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினர்
இந்த தளத்தில் பிற இணையதளங்கள் / பயன்பாடுகளுக்கான இணைப்புகள் இருக்கலாம் (“இணைக்கப்பட்ட தளங்கள்”). இணைக்கப்பட்ட தளங்கள் EMBIBE-இன் கட்டுப்பாட்டில் இல்லை மற்றும் இணைக்கப்பட்ட தளத்தில் உள்ள எந்தவொரு இணைப்பும், அல்லது இணைக்கப்பட்ட தளத்தில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது புதுப்பிப்புகள் அல்லது இணைக்கப்பட்ட எந்த தகவலும் உட்பட, எந்த இணைக்கப்பட்ட தளத்தின் உள்ளடக்கங்களுக்கும் EMBIBE பொறுப்பல்ல. எந்தவொரு இணைப்பையும் தளத்தில் இணைக்கப்பட்டிருந்தாலும் இது EMBIBE அல்லது அதன் மூன்றாம் தரப்பினருடனான (விளம்பரதாரர்கள் உட்பட) ஏதேனும் ஒரு தளம் உள் இணைப்பாக அல்லது விளம்பரங்களில் வழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல் மற்றும் பணம் செலுத்துதல் மற்றும் அத்தகைய ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய பிற விதிமுறைகள், நிபந்தனைகள், உத்தரவாதங்கள் அல்லது பிரதிநிதித்துவங்கள் அல்லது விளம்பரங்கள், உங்களுக்கும் விளம்பரதாரர் அல்லது பிற மூன்றாம் தரப்பினருக்கும் இடையே மட்டுமே. அத்தகைய பரிவர்த்தனைகளுக்கும் அல்லது வணிகத்திற்கும் EMBIBE பொறுப்பாகவோ அல்லது சட்டப்பொறுப்பிற்குட்பட்டதாகவோ இருக்காது.
எந்தவொரு இணைக்கப்பட்ட தளங்களின் பயன்பாடும் மூன்றாம் தரப்பினரின் பயன்பாட்டு விதிமுறைகள், உரிம ஒப்பந்தம், தனியுரிமைக் கொள்கை அல்லது இதுபோன்ற பிற ஒப்பந்தங்களால் நிர்வகிக்கப்படுகிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் மற்றும் ஒப்புக்கொள்கிறீர்கள். EMBIBE எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் தகவல் அல்லது பிற நடைமுறைகளுக்கான எந்தவொரு மற்றும் அனைத்துப் பொறுப்பையும் நிராகரிக்கிறது. உங்கள் தனிப்பட்ட அல்லது மூன்றாம் தரப்பினரால் சேகரிக்கப்பட்ட, செயலாக்கப்பட்ட, பகிரப்பட்ட அல்லது தக்கவைக்கக்கூடிய பிற தகவல்களுக்குப் பொருந்தக்கூடிய எந்தவொரு உத்தரவாதத்தையும் EMBIBE வெளிப்படையாக மறுக்கிறது.
13.ஒருங்கிணைந்த சேவை
தளம் அல்லது இணையத்தில் அல்லது EMBIBE -இன் ஃபேஸ்புக் கணக்கு (https://www.facebook.com/embibe.me/) (“ஒருங்கிணைந்த சேவை”) போன்ற தொடர்புடைய பயனர் கணக்குகள் வழியாக தளத்தை உபயோகிக்க நாங்கள் உங்களை அனுமதிக்கிறோம். ஒரு ஒருங்கிணைந்த சேவையைப் பயன்படுத்தி (அல்லது அணுகலை வழங்குவதன் மூலம்) தளத்தில் பதிவு செய்வதன் மூலம், உங்கள் ஒருங்கிணைந்த சேவையின் கணக்குத் தகவலை நாங்கள் அணுகலாம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் உங்கள் அணுகல் அல்லது பயன்பாடு தொடர்பான ஒருங்கிணைந்த சேவையின் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கிறீர்கள். இயங்குதளம், அல்லது கைபேசி பயன்பாட்டுத் தளம் அல்லது இணையத்தில் உள்ள பிற தளங்கள் ஒருங்கிணைந்த சேவை வழியாக இருக்கலாம். எந்தவொரு ஒருங்கிணைந்த சேவையும் உங்களது சான்றாதார தளம், அதாவது இணையதளத்தில் கைபேசி பயன்பாட்டுத் தளம் அல்லது பிற தளங்களை அணுகுவதன் அல்லது பயன்படுத்துவதன் விளைவாக ஒருங்கிணைந்த சேவையுடன் உங்கள் தொடர்புகளுக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. உங்களது உபயோகம் ஒருங்கிணைந்த சேவை மூலம் இருக்கலாம். ஆனால் உங்களது ஒருங்கிணைக்க பட்ட கணக்கின் பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளால் இந்த தளத்தின் கொள்கைகளையும் நிபந்தனைகளையும் மாற்றியமைக்கவோ மாற்றவோ முடியாது. ஃபேஸ்புக், கூகுள் போன்ற எந்தவொரு இணைக்கப்பட்ட சேவை கணக்கும் சரியாக குறிப்பிட படவில்லை என்றாலும் “ஒருங்கிணைந்த சேவை” என்ற வரையறைக்குள் வருகிறது.
14.இழப்பீடு
சம்பந்தப்பட்ட சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள், நீங்கள் Embibe மற்றும் அதன் துணை நிறுவனங்கள், துணை அமைப்புகள், இயக்குநர்கள், முகவர்கள், ஊழியர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு தீங்கு விளைவிக்காதவகையில் பாதுகாக்க, இழப்பீடு வழங்க ஒப்புக்கொள்கிறீர்கள். இதில் பயன்பாட்டு விதிமுறைகளை மீறுதல் காரணமாக எழும் நியாயமான வழக்கறிஞர்களின் கட்டணம் உட்பட, அனைத்து சேதங்கள், மற்றும் செலவுகள் உள்ளடங்கும்.
15.அறிவுசார் சொத்துரிமை சட்டம் மீறல்
நாங்கள் மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை மதிக்கிறோம். மேலும், நீங்கள் Embibe அறிவுசார் தனியுரிமைகளைப் பாதுகாக்க ஒப்புக்கொள்கிறீர்கள் மற்றும் இந்த பயன்பாட்டு விதிமுறைகளின் காலத்திலும் அதற்குப் பின்னரும் தளத்தில் மற்ற அனைவரின் அறிவுசார் தனியுரிமைகளின் அணுகலைக் பாதுகாக்க ஒப்புக்கொள்கிறீர்கள். விதிமீறும் மூன்றாம் தரப்பினரின் அறிவுசார் சொத்துரிமைகளை பதிவேற்றுவது, இடுகையிடுவது இல்லையெனில் தகவல்களை பயனர்கள் அனுப்புவதற்கு அனுமதி இல்லை.
நாங்கள் கூறப்படும் பதிப்புரிமை புகார்களின் அறிவிப்பைப் பெறுகையில் இவை பதிப்புரிமைச் விதி, 1957க்கு இணங்குவதில்லை, நாங்கள் சட்ட விரோதமான உள்ளடக்கங்களை உடனடியாக அகற்ற அல்லது முடக்க முயற்சிப்போம். நாங்கள் விதிமீறுபவர்களின் கணக்குகளை முடக்கலாம்.
நீங்கள் பதிப்புரிமை உரிமையாளராகவோ அல்லது அதன் முகவராகவோ இருந்தால், உங்கள் பதிப்புரிமைகளை மீறும் தளங்களில் ஏதேனும் உள்ளடக்கம் இருப்பதாக நீங்கள் நம்பினால், ([email protected])
-இல் எங்களுக்கு நீங்கள் உங்கள் புகாரை சமர்ப்பிக்கலாம்.
16. நீக்கம்
Embibe, அதன் சொந்த விருப்பத்தின் பேரில், உங்கள் கணக்கை உடனடியாக நிறுத்தலாம், கட்டுப்படுத்தலாம் அல்லது இடைநிறுத்தம் செய்யலாம். உங்கள் பதிவை நீக்கலாம் அல்லது, பிற தகவல் அல்லது பயனர் உள்ளடக்கம் மற்றும்/அல்லது தளத்தைப் பயன்படுத்துவதையோ அணுகுவதையோ எந்த அறிவிப்பும் இல்லாமல் தடைசெய்யலாம். இந்த பயன்பாட்டு விதிமுறைகளில் ஏதேனும் விதிகளை நீங்கள் மீறியிருந்தால் இவை செய்யப்படும்.
உங்கள் மொபைலில் உங்கள் கணக்கை நீக்க விரும்பினால், உங்கள் சாதனத்திலிருந்து App-இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி App-ஐ நீக்குவதன் மூலம் உங்கள் கணக்கை நீக்கிக்கொள்ளலாம். இல்லையெனில், தளம் வழியாவாகவும் நீங்கள் அவ்வாறு செய்யலாம்.
நீங்கள் விதிமுறைகளை பின்பற்றி கணக்கை நீக்கியவுடன், உங்கள் கணக்கு நிலை “Inactive” என்று காட்டப்படும். Embibe பயனரால் எழுதப்பட்ட செய்தியின் பேரில் மட்டுமே இத்தகைய நீக்கம் பிரதிபலிக்கும். நீக்கப்படும்போது, தளத்தை அணுக அல்லது பயன்படுத்துவதற்கான உரிமையை நீங்கள் இழக்கிறீர்கள்.
17.பிரதிநிதித்துவம் மற்றும் உத்தரவாதங்கள்
நீங்கள் செய்தி அம்சத்தின் மூலம் தளத்தில் காணொளி, படம், உரை, மென்பொருள், தகவல் அல்லது எந்த உள்ளடக்கத்தையும் இடுகையிடவோ, பதிவேற்றவோ அல்லது வெளியிடவோ உங்களுக்குத் தேவையான உரிமை, உரிமம், அங்கீகாரம் அல்லது அனுமதி உள்ளது என்பதை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் மற்றும் உத்தரவாதம் செய்கிறீர்கள். செய்தி அம்சம் என்பது பதிவுசெய்யப்பட்ட பயனராக இருந்தாலும் அல்லது பதிவுசெய்யப்படாத பயனராக இருந்தாலும், எந்தவொரு பயனருக்கும் ஆதரவை வழங்குவதற்காக Embibe தளத்தில் இடம்பெற்றுள்ள ‘pop-up’ அம்சத்தை உள்ளடக்கியதாகும். எங்கள் தளத்தில் இடுகையிடுதல், பதிவேற்றுதல் அல்லது பகிருதல் ஆகியவற்றின் மூலம், எந்தத் தடையுமின்றி அதைப் பயன்படுத்துவதற்கு எங்களை அங்கீகரித்துள்ளீர்கள் என்பதை இதன்மூலம் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
18.பணம் செலுத்துதல்
சேவைகளின் பயன்பாடு மற்றும் தளத்தை அணுக அனுமதிக்கும் உறுப்பினர் கட்டண திட்டங்களை Embibe தீர்மானிக்கலாம் இந்த பயனர் கட்டண திட்டங்கள் அவ்வப்போது தளத்தில் கிடைக்கும். தளத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சரக்கு மற்றும் சேவை வரி உட்பட பிற வரிகளுக்கு நீங்களே பொறுப்பு. அனைத்து கட்டணங்களும் திரும்பப் செலுத்தப்படாது.
உறுப்பினர் கட்டணத்தைச் செலுத்தாத நிலையில், தளத்திற்கான உங்கள் அணுகலை நிறுத்துவதற்கான உரிமையை Embibe கொண்டுள்ளது.
19.தளத்தின் தகவல்
இந்த தளம் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் பயனர் தகவலை விற்கவோ அல்லது வாடகைக்கு விடவோ இல்லை. நீங்கள் தளத்தைப் பயன்படுத்தும்போது, நீங்கள் விரும்பும் சில தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம் என்பதை இதன்மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள். அத்தகைய தகவல் சேகரிப்பு தளத்தில் கிடைக்கும் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் அடிப்படையில் இருக்கும்.
20. புகார்கள் மற்றும் குறைகள்
இந்த தளத்தில் சிலரால் தீங்குவிளைவிக்கும், அநாகரீகமான அல்லது ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்படும் உள்ளடக்கங்களை நீங்கள் பார்க்க நேரிடலாம் என்பதை புரிந்துகொள்கிறீர்கள். தளத்தால் அடையாளம் காணப்படாத தீங்குவிளைவிக்கும், அநாகரீகமான அல்லது ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்படும் தகவல்களும் இதில் அடங்கும். இந்த தளம் மற்றும் அதன் தொடர்புடைய தகவல்கள் அல்லது சேவைகளை அதன் அனைத்து விளைவுகளையும் அறிந்து பயன்படுத்த நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும், உங்களால் தீங்கான, அநாகரீகமான அல்லது ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்படும் உள்ளடக்கத்திற்கு நாங்கள் பொறுப்பேற்கவில்லை. அனைத்து புகார்களும் ([email protected]) என்னும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும் அல்லது பின்வரும் முகவரியில் எங்களுக்கு எழுதி அனுப்பலாம்:
கவனம்: சட்டக் குழு
முதல் தளம், எண்.150, டவர் பி, டயமண்ட் டிஸ்ட்ரிக்ட், பழைய விமான நிலைய சாலை, கொடிஹல்லி, பெங்களூரு–560008, கர்நாடகா, இந்தியா
உங்கள் கோரிக்கை / புகார்களை நீங்கள் குறைதீர்க்கும் அதிகாரிக்கு அனுப்பலாம்.
பெயர்: ராதா நாயர்
தொடர்பு மின்னஞ்சல்: ([email protected])
21.எங்களை தொடர்பு கொள்ளவும்
பயன்பாட்டு விதிமுறைகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் ([email protected]) என்னும் மின்னஞ்சல் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
22.தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்தி மற்றும்/அல்லது மின்னஞ்சல்கள் பெறுவதற்கான ஒப்புதல்
இந்த தளத்தில் நீங்கள் பதிவு செய்வதன் மூலம் Embibe உங்களை கீழ் காணும் வழிகளில் தொடர்பு கொள்ள நீங்கள் சம்மதம் தெரிவிக்கிறீர்கள் (i) நீங்கள் பகிர்ந்துள்ள கைபேசி எண்ணில் (ii) குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அறிவிப்புகள் அல்லது வேறு ஏதேனும் மின்னணு வடிவத்தில் செய்திகள் (iii) தொடர்பு ஆதரவு கருவிகள்; (iv) ஃபேஸ்புக், மெசன்ஜ்ர், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் அல்லது வேறு ஏதேனும் சமூக வலைத்தளம் ; (v) வாட்ஸ்அப், டெலிகிராம், வைபர் மற்றும் இது போன்ற வேறு ஏதேனும் செய்தி அனுப்பும் முறைகள் ஆகியவை அனைத்தும் இதில் அடங்கும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஊடகத்தின் மூலமாக Embibe உங்களைத் தொடர்பு கொண்டாலும் அதற்க்கு Embibe எந்த நேரத்திலும் பொறுப்பாகாது என்பதை நீங்கள் சம்மதிக்கிறீர்கள் மற்றும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
23.தளத்தை அணுகுவதற்கான கட்டணம்
பதிவுபெற அல்லது தளத்தை அணுக, நீங்கள் கட்ட வேண்டிய நிலையான வலைத்தள கட்டணங்கள் விதிக்கப்படலாம். வலைத்தளத்தை இயக்குபவரின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி பயனரின் வலைத்தள இயக்குபவரிடமிருந்து நீங்கள் கூடுதல் தரவுக் கட்டணங்களைச் செலுத்தலாம். அத்தகைய கட்டணங்களை எந்த நேரத்திலும் Embibe ஏற்காது.
24. பல்பொருள்
24.1 ஆளும் சட்டம் மற்றும் அதிகார வரம்பு: இந்த பயன்பாட்டு விதிமுறைகள் இந்தியாவின் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. தளம் அல்லது இந்த பயன்பாட்டு விதிமுறைகளின் கீழ் எழும் எந்தவொரு தகராறு தொடர்பான எந்தவொரு உரிமைகோரலும் கர்நாடகாவின் பெங்களூருவில் அமைந்துள்ள தகுதிவாய்ந்த அதிகார வரம்பிற்கு உட்பட்ட நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படும். எந்தவொரு விதிகளையும் சட்டங்களையும் பொருட்படுத்தாமல், தளத்தின் பயன்பாட்டு விதிமுறைகள் அல்லது பயன்பாட்டுடன் தொடர்புடைய எந்தவொரு உரிமைகோரல் எழுந்த ஒரு வருடத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது எப்போதும் தாக்கல் செய்யக்கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
24.2 கூட்டாண்மை இல்லை: இந்த பயன்பாட்டு விதிமுறைகளின்படி, நீங்கள் இந்த தளத்தை உபயோகிப்பதன் மூலன் உங்களுக்கும் பிற தரப்பினருக்கும் Embibe-க்கும் இடையே கூட்டுமுயற்சி, கூட்டாண்மை, வேலைவாய்ப்பு அல்லது முகமை உறவு போன்ற எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
24.3 தலைப்புகள்: இந்த பயன்பாட்டு விதிமுறைகளில் பயன்படுத்தப்படும் தலைப்புகள் குறிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே எந்த வகையிலும் பிரிவின் நோக்கத்தை வரையறுப்பதற்க்காகவோ அல்லது கட்டுப்படுத்தவதற்க்காகவோ இல்லை.
இந்த பயன்பாட்டு விதிமுறைகளில் ஏதேனும் விதிகள் செயல்படுத்த முடியாததாக இருந்தால், அதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான அளவிற்கு மட்டுமே அத்தகைய ஏற்பாடு சீர்திருத்தப்படும்.
24.5 Force Majeure: கடவுளின் செயல், போர், நோய், புரட்சி, கலவரம், சிவில் கலவரம், வேலைநிறுத்தம், ஊரடங்கு, தொற்றுநோய், பெருதொற்றுநோய், முடக்குதல, வெள்ளம், தீ, எந்தவொரு பொது பயன்பாட்டு செயலிழப்பு, மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு, உள்கட்டமைப்பு தோல்வி அல்லது Embibe-யின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வேறு ஏதேனும் காரணம் போன்றவற்றால் ஏற்படும் விண்ணப்பத்தின் பகுதிகள் இல்லாமல் போவது அல்லது சந்தா பெற்ற உள்ளடக்கமும் கிடைக்காமல் போவது போன்ற சூழ்நிலைகளில் Embibe எந்தப் பொறுப்பையும் கொண்டிருக்காது.
24.5 தளர்த்தல்: நீங்கள் அல்லது பிறர் பயன்பாடு விதிமுறைகளை மீறினால் அதற்கு எதிராக Embibe விதிகளை தளர்த்திக்கொள்ளாது. இது போன்ற அடுத்தடுத்த மீறல்கள் நடந்தால் Embibe உரிமைகளை கட்டுப்படுத்தாது.
24.6 நிலைத்திருத்தல்: இந்த பயன்பாட்டு விதிமுறைகள் காலாவதி ஆனாலும் நீக்கப்பட்டாலும், பிரிவு 11, 14 மற்றும் 15 இன் விதிகளின் கீழ் உள்ள கோரல்கள், அதை தாண்டியும் நிலைத்திருக்கும்.
24.7 முழு ஒப்பந்தம்: இந்த பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் தளத்தில் உள்ள தனியுரிமைக் கொள்கை உங்களுக்கும் Embibe-க்கும் இடையே உள்ள முழு ஒப்பந்தத்தையும் உருவாக்குகிறது, மேலும் உங்களுக்கும் Embibe-க்கும் இடையே உள்ள எந்த முன் ஒப்பந்தங்களையும் முறியடித்து உங்கள் தளத்தின் பயன்பாட்டை நிர்வகிக்கிறது.
25. அகற்றுதல் கொள்கை
Embibe பதிப்புரிமை உரிமையாளர்களின் நியாயமான உரிமைகளை மதிக்கிறது மற்றும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளபடி ஏற்கத்தக்க உரிமை மீறிய உள்ளடக்கங்களை நீக்கும் நடைமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நடைமுறையைப் பயன்படுத்துவதில் பதிப்புரிமை உரிமையாளர்களுக்கு வழிகாட்டுவதும் ஊக்குவிப்பதுமே இந்தக் கொள்கையின் நோக்கம்.
Embibe தளத்தில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளது, அவை பல்வேறு ஊடக தளங்களில் இலவசமாகக் கிடைக்கின்றன. இந்த வீடியோக்கள் மேலும் பலரை சென்றடைய வேண்டுமென்பதற்காகக் உரிமையாளர்களால் பதிவேற்றப்பட்டுள்ளன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த குறிப்பிட்ட காணொளிகளின் மூலாதாரங்கள் உரிமையாளர்களால் Embibe உள்ளிட்ட வேறு சில மூன்றாம் தரப்பினரின் பயன்பாட்டிற்காகவும் அளிக்கப்பட்டுள்ளது. Embibe இந்த வீடியோக்களின் மேல் எந்தப் பதிப்புரிமையும் கோரவில்லை.
Embibe பதிப்புரிமைச் சட்டம், 1957 / பதிப்புரிமை விதிகள், 2013 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் அவற்றின் அடுத்தடுத்த திருத்தங்களைப் பின்பற்றுகிறது. இதன் ஒரு பகுதியாக, எங்களின் தளத்தில் பதிப்புரிமை மீறிய உள்ளடக்கத்தை முடக்கி, சட்டப்பூர்வ பதிப்புரிமை உரிமையாளர்களால் கூறப்படும் மீறல் குறித்த எழுத்துப்பூர்வ அறிவிப்புகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கும்.
பதிப்புரிமை மீறல் புகார்களை சமர்ப்பிக்க, Indiavidual Learning Limited, No. 150, முதல் தளம், டவர்ஸ் B, டைமண்ட் டிஸ்ட்ரிக்ட், பழைய விமான நிலைய சாலை, கொடிஹல்லி, பெங்களூரு – 560008, கர்நாடகா, இந்தியா அல்லது பின்வருவனவற்றை வழங்குவதன் மூலம் ([email protected]) க்கு மின்னஞ்சல் அனுப்பவும். –
1. பதிப்புரிமை மீறப்பட்டதாகக் கூறப்படும் தகவலுக்கான உங்களது அடையாள சான்று.
2. குறிப்பிட்ட தகவலை எங்கள் இணையதளத்தில் அடையாளம் காணும் வகையிலான (URL அளிப்பதே அதனை விரைவாக அடையாளம் காண சிறந்த வழி) அடையாளசான்று.
3. அந்த தகவல் அதன் உரிமையாளர், அதன் இடைத்தரகர் மற்றும் சட்டம் அனுமதிக்காத வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தால் நம்பிக்கையின் அடிப்படையில் அதற்க்கான வாக்குமூலம்.
4. நீங்கள் பதிப்புரிமையாளராக இல்லாத நிலையில் பதிப்புரிமையாளர் உடனான உங்களது உறவு குறித்த விளக்கம்.
5. பதிப்புரிமையாளரின் சார்பில் இயங்க அனுமதிக்கப்பட்டவரின் எழுத்து வடிவிலான அல்லது மின்னணு கையொப்பம்.
6. தங்களைத் தொடர்பு கொள்ளத் தேவையான தகவல்களான, பெயர், முகவரி, தொலைபேசி எண்.
7. அறிவிப்பில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியானது மற்றும் நீங்கள் தான் பதிப்புரிமையாளர் அல்லது பதிப்புரிமையாளரின் சார்பில் இயங்க அனுமதிக்கப்பட்டவர் என்னும் உறுதி வாக்குமூலம்.